#P2P போராட்டத்தின் இணைத் தலைவர்களில் ஒருவரான நாதனிடம் விசாரணை

#P2P இணைத் தலைவர் நாதனிடம் விசாரணை

#P2P இணைத் தலைவர் நாதனிடம் விசாரணை

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான மக்கள் எழுச்சி போராட்டத்தின் இணைத் தலைவர்களில் ஒருவரான சிவயோக நாதன் இன்று பயங்கரவாத குற்ற தடுப்புப் பிரிவில் 2 மணிநேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இன்றைய தினம் பல தரப்பட்ட கேள்விகள் அவர் சார்ந்த வரலாறுகள் தொடர்பாக வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதுடன், கையடக்க தொலைபேசியில் இருக்கின்ற முகநூல் தொடர்பாகப் பதியப்பட்டுள்ளது.

அதிலும் தடை செய்யப்பட்ட செயலி தொடர்பாக முகநூல் மற்றும் வட்ஸ்சப் இணைய வழியூடாக இயங்கும் சில குழுமங்களைச் செயற்படுத்துவது தொடர்பாகச் சந்தேகம் உள்ளதாகவும் இதன் இயக்குநர் நீங்கள் தான் என்றும் விசாரிக்கப்பட்டுள்ளார்.

கடந்த காலங்களில் சிவில் சமூக செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்த சிவயோகநாதன் பல தடவைகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் இன்றைய தினம் பயங்கரவாத குற்றத் தடுப்புப் பிரிவுக்கு விசாரணைக்காக உட்படுத்தப் பட்டுள்ளார். இதன் போது அவருடைய தேசிய அடையாள அட்டை கடவுச்சீட்டு மற்றும் ஸ்மார்ட் ஃபோன், சிம்கார்ட் உட்பட அனைத்து ஆவணங்களையும் எடுத்து வருமாறு தெரிவிக்கப் பட்டிருந்தது .

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஊடகவியலாளர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத் தக்கது.

ilakku-weekly-epaper-144-august-22-2021