குடாநாட்டில் கரையொதுங்கும் சடலங்கள் குறித்து உடன் விசாரணை வேண்டும்; சுரேஷ் வலியுறுத்து

குடாநாட்டில் கரையொதுங்கும் சடலங்கள்
யாழ்ப்பாணம் மாவட்ட கடற்கரைகளில் சடலங்கள் கரையோதுங்கும் நிலையில் இதுவரை தகவல்கள் வெளியாக நிலையில் காணாமல்போனவர்களின் உறவினர்கள் மத்தியில் அச்சங்கள் தோன்றியுள்ளன என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“யாழ். மாவட்ட கரையோரங்களில் கடந்த வாரம் ஆறு சடலங்கள் கரையொதுங்கியுள்ளன. இது தொடர்பில் எந்தவிதமான தகவல்களும் வெளிவரவில்லை. அதனால் காணாமல்போனவர்கள் பற்றிய தகவல்கள் வெளிவராத நிலையில் இந்த சடலங்கள் கரையொதுங்குகின்றன.

குடாநாட்டில் கரையொதுங்கும் சடலங்கள் தொடர்பில், கடலில் விபத்துக்கள் நடைபெற்று இருக்க வேண்டும். ஒன்றில் இலங்கை மீனவர்கள் அல்லது இந்திய மீனவர்களினது மீன்பிடிப் படகுகள் விபத்துக்குள்ளாகி இருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு விபத்துக்கள் நடைபெற்றதாக தகவல் இல்லை.

இதனால் காணாமல் போனவர்களின் உறவுகள் அச்சத்தில் உள்ளனர். ஆனால், அரசு எந்த விசாரணைகளையும் முன்னெடுக்கவில்லை. மக்களுக்கு விபரங்களை விரைந்து கொடுக்க வேண்டும்.

பொலிஸ், கடற்படை மீது அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, பொலிஸார் மற்றும் கடற்படை ஆகியவை இந்தச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை தீவிரப்படுத்தி, அதன் உண்மைத் தன்மைகளை விபரங்களை விரைவாக வெளிப்படுத்த வேண்டும்” என்றார்.

ilakku Weekly Epaper 159 December 05 2021 Ad குடாநாட்டில் கரையொதுங்கும் சடலங்கள் குறித்து உடன் விசாரணை வேண்டும்; சுரேஷ் வலியுறுத்து