கிழக்கில் தொற்றுக்குள்ளான 94 வீதமானோருக்கு ‘டெல்டா’ என அடையாளம்

94 வீதமானோருக்கு 'டெல்டா' தொற்றுகிழக்கு மாகாணத்தில், 94 வீதமானோருக்கு ‘டெல்டா’ என தொற்று: கிழக்கில் கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களில் 94 வீதமானோர் “டெல்டா” பிறழ்வும் ஊடாகவும், 6 வீதமானோர் “அல்பா” பிறழ்வு ஊடாகவும் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை ஆய்வின் ஊடாக கண்டறியப் பட்டுள்ளது என்று கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.ஆர்.எம்.தௌபீக் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்:

கடந்த நான்காம் திகதி மட்டக்களப்பிலிருந்து 49 மாதிரிகளும், திருகோணமலையிலிருந்து 18 மாதிரிகளும் ,கல்முனையில் இருந்து 26 மாதிரிகளும், அம்பாறையில் இருந்து 30 மாதிரிகள் என மொத்தமாக 123 மாதிரிகள் கிழக்கு மாகாணத்திலிருந்து கொழும்பு சிறி ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆய்வு கூடத்திற்கு பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. அதன் உத்தியோகபூர்வ முடிவுகள் நேற்று கிடைக்கப்பெற்றுள்ளது.

முடிவுகளின் படி 123 மாதிரிகளில் 23 மாதிரிகள் பரிசோதனைக்கு உகந்தது இல்லையெனவும், 100 மாதிரிகளில் 94 டெல்டா பிறழ்வு, 06 அல்பா பிறழ்வு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக அறிக்கையின்படி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இருந்து அனுப்பப்பட்ட 49 மாதிரிகளில் 43 டெல்டா, 04 அல்பா ,02 பரிசோதனைக்கு உகந்ததல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பில் 09 வயதுடைய சிறுவன் ஒருவரும் டெல்டா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.

கல்முனை பிராந்தியத்தில் இருந்து அனுப்பப்பட்ட 26 மாதிரிகளில் 17 டெல்டா, 01 அல்பா,08 பரிசோதனைக்கு உகந்ததல்ல எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கல்முனை பிராந்தியத்தில் திருக்கோவில் சுகாதார பிரிவைச் சேர்ந்த 81 வயதுடைய முதியவர் ஒருவரும் டெல்டா தொற்றுக்குள்ளாகியுள்ளார்.

திருகோணமலை பிராந்தியத்திலிருந்து அனுப்பப்பட்ட 18 மாதிரிகளில் 17 டெல்டா, 01 பரிசோதனைக்கு உகந்ததல்ல என தெரிவிக்கப்படுகின்றது. திருகோணமலை யிலிருந்து அனைத்து மாதிரிகளும் உப்புவெளி சுகாதார பிரிவிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

அம்பாறை பிராந்தியத்திலிருந்து அனுப்பப்பட்ட 30 மாதிரிகளில் 17 டெல்டா, 01 அல்பா 12 பரிசோதனைக்கு உகந்ததல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது. சினோபார்ம் வகை தடுப்பூசிகள் டெல்டா திரிபு வைரஸின் தாக்கத்திற்கு எதிராக மிகச்சிறப்பாக தொழிற்படுவதாக ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது.

ilakku-Weekly-Epaper-146-September-05-2021