Home ஆய்வுகள் தாயக மேம்பாடு நேற்று இன்று நாளை: கைத்தொழில் பயன்பாடு ! – தாஸ்

நேற்று இன்று நாளை: கைத்தொழில் பயன்பாடு ! – தாஸ்

கைத்தொழில் பயன்பாடுதாஸ்

கைத்தொழில் பயன்பாடு: இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் விவசாயம், விலங்கு வேளாண்மை, மற்றும் நீர்வளம் தொடர்பான கைத்தொழில் பயன்பாடுகள் தான் அந்த மாவட்டங்களில் முழுமையான வளப் பயன்பாட்டுக்கு மிகவும் முக்கியமாகும்.

முன்னர் சீமெந்து தொழிற்சாலை காங்கேசன் துறையிலும், இரசாயன தொழிற்சாலை பரந்தனிலும், உப்பு உற்பத்தி தொழிற்சாலை ஆனையிறவிலும், குறிஞ்சாத் தீவிலும் இருந்தது.  ஒட்டிசுட்டானில் ஓட்டுத் தொழிற் சாலையும், நீர்வேலியில் கண்ணாடி தொழிற் சாலையும், யாழ் மாவட்டத்தில் புடவைக் கைத்தொழில் தொழிற் சாலைகளும், இருந்தன. கல்குடாவில் காகித தொழிற் சாலை இருந்தது. மன்னாரில் மீன்கள் தகரத்தில் அடைக்கும்  தொழிற்சாலையும் இருந்தது.

இன்று இவை யாவும் முழுமையாக கைவிடப்பட்டு அழிவடைந்த நிலையில் உள்ளது. யுத்தம் முடிவடைந்து 12 வருடங்கள் பூர்த்தி செய்யப்பட்ட போதும், எந்த ஒரு கைத்தொழில் முயற்சிகளும்  ஆரம்பிக்கப்படவில்லை.

ஒரு நாட்டில் மக்கள் தன்னிறைவு காண வேண்டுமாயின், ஒவ்வொரு துறையிலும் கைத்தொழில் மேம்பாடு அடைய வேண்டும். சர்வதேச நாடுகளில் தமது துறைசார் நிபுணர்கள், சர்வதேச நிறுவனங்கள் தொழிற்சாலைகள் மீளவும் இயக்க தயார் நிலையில் உள்ளனர்.

எனவே புலம்பெயர்ந்து வாழும் எமது தாயக உறவுகள் பொருத்தமான கைத்தொழில் திட்டங்களை நடைமுறைப்படுத்த முன்வரவேண்டும். என்பதே தாயக உறவுகளின் விருப்பமாகும்.

முன்னர் முன்னர் மில்க்வைற் சோப், லாலா சோப் போன்றவை நல்ல முறையில் இயங்கியது. எனவே இன்று பரந்தனில் இராசாயன தொழிற்சாலை ஆரம்பிக்கப் பட்டால், சோப் உற்பத்தி தொழிற்சாலையை மீண்டும் ஆரம்பிக்க முடியும்.

எனவே முன்னர் முப்பது வருடங்களுக்கு முன் இயங்கிவந்த கைத்தொழில் திட்டங்களை மீளவும் இயக்க வேண்டும்.  இன்று அம்பாந் தோட்டையில் சீமெந்து தொழிற்சாலை புதிதாக ஆரம்பிக்கப்படுகின்றது. எனவே வடக்கு கிழக்கில் உள்ள தொழிற் சாலைகளையும் மீண்டும் ஆரம்பிக்க வேண்டும். இது தொடர்பான விவரமான ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும்.

தனியே விவசாயம், கால்நடை வளர்ப்பு மட்டுமே எமது மக்களை தன்னிறைவான வளத்தை நோக்கியோ, தன்னிறைவான நிலையை நோக்கியோ நகர்த்தாது.  எனவே இன்றைய சூழலுக்கு ஏற்ப பொருத்தமான கைத்தொழில் திட்டங்களை குறித்து துறைசார் நிபுணர்கள் ஆய்வுகள் நடத்த வேண்டும்.

சர்வதேச நாடுகளில் உள்ள துறைசார் நிபுணர்கள் எமது நாட்டுக்கு தேவையான கைத்தொழில் திட்டங்களை ஆய்வு செய்து, புதிய தொழில் நுட்பத்துடன் மீள இயக்க முன்வர வேண்டும். மீளவும் கைத்தொழில் பூங்கா ஆரம்பிக்க முன் வரவேண்டும்.

நாளை எமது தாயகம் இந்தியாவில் உள்ள கோயம்புத்தூர் போன்று, திருப்பூர் புடவைக் கைத்தொழில் போன்று, புதிய திட்டங்கள் ஆரம்பிக்க வேண்டும்.  100க்கும் மேற்பட்ட மின் தறி ஆலைகள் நேற்று தாயகத்தில் இருந்தது. இன்று அனைத்தும் மூடப்பட்டு உள்ளது.

வளங்களைப் பயன்படுத்தி மனிதனுடைய தேவையை நிறைவு செய்வதற்கு, மனித தலையீட்டின் மேற்கொள்ளப்படும் பொருண்மிய முயற்சிகளை கைத்தொழில் ஆகும்.

ஆரம்பத்தில் விவசாயத்தை நம்பி இருந்த பொருளாதாரம் இன்று கைத்தொழில் துறைக்கு மிக முக்கியத்துவம் கொடுக்கின்றது. சிறுகைத்தொழில் முதல் பாரிய கைத்தொழில் வரை அன்று எமது தாயகத்தில் காணப்பட்டது.  இதில் மிக முக்கியமானது சீமெந்து கைத்தொழில்.  சீனி  கைத்தொழில், ஆடைத் கைத்தொழில், பாரம்பரிய கைப்பணி கைத்தொழில் போன்றவை முக்கியமானவையாகும்.

1950ஆம் ஆண்டு காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டு 1987 வரை நன்றாக இயங்கியது. இன்று திருகோண மலை, காலி, புத்தளம் போன்ற இடங்களில் சீமெந்து தொழிற்சாலை இயங்கி வருகின்றது.

முல்லைத்தீவு கரையோரத்தில் சுண்ணாம்புக் கல் காணப்படுகின்றது. திருகோணமலை டோக்கியோ சிமெண்ட் ஆலைக்கு ஜப்பான் நாடு முதலீடு செய்துள்ளது. காங்கேசன்துறை சிமெந்து ஆலையை மீள ஆரம்பிக்க ஜப்பான் போன்ற நாடுகள் 950 மில்லியன் ரூபாய் திட்ட திட்டத்துடன் முன்வர வேண்டும்.

இன்றைய சூழலில் சுண்ணாம்புக்கல் ஏனைய இடங்களிலிருந்தே இறக்குமதி செய்யப்பட்டே சிமெண்டு ஆலை இயக்க வேண்டும். யாழ்ப்பாணப் பகுதியில் சுண்ணாம்பு கற்கள் தோண்டி எடுத்தால் குடா நாட்டின் நீர்வளம் பாதிப்பு ஏற்படும்.

எனவே பொருத்தமான ஆய்வுகள் செய்யப்பட வேண்டும். மீளவும் பொருத்தமான கைத்தொழில் திட்டம் ஆரம்பிக்க சர்வதேச நாடுகள் முன்வர வேண்டும் என்பதே தாயக மக்களின் நோக்கமாகவும் தேவையாகவும் உள்ளது .

துறைசார் நிபுணர்கள் கைத்தொழில் முயற்சிக்கான பயிற்சிகளை வழங்க முன்வர வேண்டும். இதேநேரம் பொருத்தமான கைத்தொழில் திட்டங்களை ஆரம்பிக்க தேவையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட வேண்டும். சர்வதேச நிறுவனங்கள், நாடுகள் மூலம் நிதி கோரிக்கை முன்வைத்து கைத்தொழில் திட்டங்கள் ஆரம்பிக்க முன்வர வேண்டும் என்பதே தாயக உறவுகளின் தேவையாகும். இதற்கு துறைசார் நிபுணர்கள் முன்வர வேண்டும்.

Exit mobile version