Tamil News
Home செய்திகள் 2.5 மில்லியன் ரூபா பெறுமதியான உதவிப் பொதிகளை இலங்கைக்கு வழங்கியது இந்தோனேஷியா

2.5 மில்லியன் ரூபா பெறுமதியான உதவிப் பொதிகளை இலங்கைக்கு வழங்கியது இந்தோனேஷியா

இந்தோனேஷியா 2.5 மில்லியன் ரூபா பெறுமதியான உதவிப் பொதியை இலங்கைக்கு வழங்கியுள்ளதாக கொழும்பில் உள்ள இந்தோனேஷிய தூதரகம் தெரிவித்துள்ளது.

கொழும்பிலுள்ள இந்தோனேஷிய தூதரகத்தில் நேற்று(18) இடம்பெற்ற இந்தோனேஷியாவின் 77 ஆவது சுதந்திர தின நிகழ்வின் பின்னர், இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான இந்தோனேஷிய தூதுவர் தேவி கஸ்டினா டோபிங், இலங்கைக்கு தேவையான 2.5 மில்லியன் ரூபா பெறுமதியான நன்கொடைப் பொதியை கையளித்தார்.

இந்நிகழ்வில் இலங்கையில் உள்ள இந்தோனேசிய சமூகம், இலங்கை – இந்தோனேஷியா நட்புறவு சங்கம் (SLIFA), இலங்கை மலாய் சங்கம் (SLMA) ஆகியவற்றின் பிரதிநிதிகள், மத குருமார்உள்ளிட்ட அதிதிகள் கலந்துகொண்டனர்.

மேலும், நேரில் கலந்து கொள்ள முடியாத இலங்கை மற்றும் மாலைத்தீவில் உள்ள ஏனைய இந்தோனேஷியர்களும் இணையவழியாக சுதந்திர தின நிகழ்வில் இணைந்தனர்.

Exit mobile version