Tamil News  
Home உலகச் செய்திகள் யேமன் கடற்கரைக்கு அருகில் தாக்குதலுக்கு இலக்காகி மூழ்கிய இந்திய கப்பல்?

யேமன் கடற்கரைக்கு அருகில் தாக்குதலுக்கு இலக்காகி மூழ்கிய இந்திய கப்பல்?

இந்திய கொடி தாங்கிய கப்பல், யேமன் கடற்கரைக்கு அருகில் தாக்குதலுக்கு இலக்கானதில் கப்பல் கவிழ்ந்து மூழ்கியுள்ளது.

எம்.எஸ்.வி ஃபேஸ் நூர்-ஏ-ஒலியா என்ற கப்பலில் இருந்த 13 இந்தியர்கள் உட்பட 14 பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக இந்தியாவின் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால் தெரிவித்துள்ளார்.

“எந்தத் தூண்டுதலும் இன்றி நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு” கண்டனம் தெரிவித்த சோனாவால், அப்பகுதியில் மாலுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்யத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறினார்.

கப்பல் மீது தாக்குதல் நடத்தியது யார் என்பது குறித்து உடனடியாகத் தெரியவரவில்லை. இருப்பினும், சௌதி அரேபியாவின் ஆதரவு பெற்ற யேமன் அரசு, இந்தத் தாக்குதலுக்கு ஹூத்தி கிளர்ச்சியாளர்களே காரணம் எனக் குற்றம் சாட்டியுள்ளது.

Exit mobile version