அதிக வெப்பத்தால் தவிக்கும் இந்திய மக்கள்

வெப்பத்தால் தவிக்கும் இந்திய மக்கள்

வழமையை விட இந்த வருடம் மிக விரைவாக இந்தியாவில் வெப்பம் அதிகரித்து வருவதால் பல மில்லியன் மக்கள் கடும் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வழமையாக மே மற்றும் ஜூன் மாதங்களிலேயே இந்தியாவில் வெப்பநிலை அதிகரிப்பதுண்டு. ஆனால் தற்போது அது முன்னதாகவே இடம்பெறுகின்றது. கடந்த மார்ச் மாதத்தில் இந்தியாவில் நிலவிய வெப்பநிலை கடந்த 122 ஆண்டுகளின் வெப்பநிலையுடன் ஒப்பிடும்போது மிக அதிகமாகும்.

தற்போதைய வெப்பநிலை அதிகரிப்பு 15 மாநிலங்களில் ஏற்பட்டுள்ளதாக இந்தியாவின் விஞ்ஞான மற்றும் சுற்றுப்புறசூழல் மையம் தெரிவித்துள்ளது. இந்த வாரம் தலைநகர் புதுடில்லியின் வெப்பநிலை 44 பாகை செல்சியஸ் ஐ எட்டலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வெப்பநிலை அதிகரிப்பு கோதுமை விளைச்சலில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவதுடன், எரிபொருட்களின் தேவையையும் அதிகரிக்க செய்யும். தற்போது இடம்பெறும் உக்ரைன் போரில் இந்த இரு துறைகளும் அதிக பாதிப்புக்களை சந்தித்துள்ளதால் உலகம் கடுமையா நெருக்கடிகளை எதிர்கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

Tamil News