”இந்தியன் ஓஷன் ரிம்” மாநாடு இன்று

இந்தியப் பெருங்கடல் எல்லையிலுள்ள நாடுகள் அமைப்பின் அமைச்சர்கள் கூட்டம் பங்களாதேஷில் இன்று(24) நடைபெறுகின்றது.

இந்தியன் ஓஷன் ரிம்(Indian Ocean Rim) என அழைக்கப்படும் இந்த அமைப்பில் இலங்கை உட்பட பிராந்தியத்தில் உள்ள 23 நாடுகள் அடங்கியுள்ளன.

இந்த ஆண்டு மாநாட்டை பங்களாதேஷ் நடத்துகின்றது. இந்த மாநாட்டில் பங்குபற்றுவதற்காக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி உள்ளிட்ட இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவொன்று நேற்று (23) நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது.

உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளுடன் அமைச்சர் இருதரப்பு சந்திப்புகளையும் நடத்தவுள்ளார். 2023ஆம் ஆண்டு மாநாட்டின் தலைமைப் பொறுப்பை இலங்கை பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.