இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்த இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பதினொரு இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறை அருகே இன்று புதன்கிழமை காவல் பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் ஒரு படகையும் அதிலிருந்த பதினொரு மீனவர்களையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களை மயிலிட்டி அழைத்து வந்து, மேலதிக நடவடிக்கைக்காக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர்.