இலங்கையின் உறுதியான நம்பகத்தன்மை மிக்க சகாவாக இந்தியா விளங்கும்- அமைச்சர் ஜெய்சங்கர்

நம்பகத்தன்மை மிக்க சகாவாக

“இந்தியா இலங்கையின் உறுதியான நம்பகத்தன்மை மிக்க சகாவாக விளங்கும் என உறுதியளித்தேன்” என இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவுடன் மெய்நிகர் சந்திப்பொன்றில் இன்று ஈடுபட்டிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்தக்கூடிய திட்டங்கள் மற்றும் இந்திய முதலீடுகள் குறித்து  அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

இதன் போது இலங்கையில் சிறையில் உள்ள இந்திய மீனவர்கள் குறித்தும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் மனிதாபிமான அடிப்படையில் அவர்களை முன்கூட்டியே விடுதலை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் 400 மில்லியன் டொலர் பணப்புழக்கத்தினை பரிமாறிக்கொள்வது குறித்து சாதகமாக ஆராய்ந்தோம்- ஏசியுவிற்கான கொடுப்பனவு 515. 2 மில்லியன் அமெரிக்க டொலர் ஒத்திவைக்கப்பட்டது குறித்தும் ஆராய்ந்தோம் என இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய பொருட்களிற்கான 1மில்லியன் டொலர் கடன் மற்றும் எரிபொருள் கொள்வனவிற்கான 500மில்லியன் டொலர் எல்.ஓ.ஐ.சி குறித்தும் ஆராய்ந்தோம் என இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை எண்ணெய் குதம் தொடர்பான முன்னேற்றத்தை வரவேற்றேன் அது எரிசக்தி பாதுகாப்பிற்கு வழிவகுக்கும் என்றும்   இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்தக்கூடிய திட்டங்கள் முதலீடுகள் குறித்தும் ஆராய்ந்தோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த முக்கியமான தருணத்தில் இலங்கைக்கு உதவுவதற்கான நடவடிக்கைகளை ஏனைய சர்வதேச சகாக்களுடன் இணைந்து இந்திய முன்னெடுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

Tamil News