மேற்குலக நாடுகளின் வர்த்தகங்களை கைப்பற்ற இந்தியா முயற்சி

உக்ரைன் போரை தொடர்ந்து ரஸ்யாவில் இருந்து மேற்குலக நாடுகளின் முதலீட்டாளர்கள் வெளியேறிவரும் நிலையில், அந்த இடங்களை கைப்பற்றுவதற்கு இந்தியாவின் நிறுவனங்கள் போட்டியிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எக்சோன், செல் போன்ற எரிபொருள் ஆகழ்வு நிறுவனங்களின் எரிபொருள் வேலைத் திட்டங்களை இந்தியாவின் எண்ணெய் மற்றும் இயற்கைவாயு நிறுவனமான ஒ.என்.ஜி.சி என்ற நிறுவனம் கைப்பற்ற முயன்று வருகின்றது.

சைபீரியாவில் உள்ள சலீம் எண்ணெய் வயல்களில் செல் நிறுவனத்தின் 50 விகிதமான பங்குகளை கைப்பற்ற இந்தியா விண்ணப்பங்களை சமர்ப்பித்தபோதும் அது வெற்றியளிக்கவில்லை.

இந்த போர் நீண்டகாலம் நீடிக்காது. தடைகளும் அப்படித் தான் எனவே நாம் எண்ணெய் வியாபாரத்தை கைப்பற்ற முயற்சிக்கவேண்டும். சில இடங்களில் அச்சத்தை தவிர்க்கவேண்டும் என இந்திய நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ரஸ்யாவின் ரொஸ்நெப்ற் நிறுவனத்தில் பிரித்தானியாவின் வி.பி நிறுவனம் கொண்டுள்ள 20 விகிதமான பங்குகளை வாங்குவதற்கும் இந்திய நிறுவனங்கள் முயன்று வருகின்றன.

Tamil News