பாகிஸ்தான் மீது பிரமோஸ் ஏவுகணையை ஏவிய இந்தியா

பிரமோஸ் ஏவுகணையை ஏவிய இந்தியா

பாகிஸ்தான் மீது பிரமோஸ் ஏவுகணையை ஏவிய இந்தியா

இந்தியாவின் ஏவுகணையானது தவறுதலாக ஏவப்பட்டு கடந்த புதன்கிழமை (16) பாகிஸ்தான் தலைநகரில் இருந்து 300 மைல்கள் தொலைவில் வீழ்ந்தது இரு நாடுகளுக்குமிடையில் பதற்றத்தை தோற்றுவித்திருந்தது.

இந்திய – ரஸ்ய தயாரிப்பான பிரமோஸ் ஏவுகணையே தவறுதலாக ஏவப்பட்டிருந்தது. அணுவாயுதங்களை சுமந்து செல்லும் தகமை கொண்ட இந்த ஏவுகணையானது குண்டுகள் பொருத்தப்படாத நிலையில் ஏவப்பட்டதால் பெரும் அனர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளது.

இந்த ஏவுகணையானது 300 தொடக்கம் 500 கி.மீ தூரவீச்சு கொண்டது எனவும், அதனை இந்தியாவின் வடக்குப்புறத்தில் வைத்து ஏவினால் அது பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தை தாக்கும் திறன் கொண்டது என அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட ஆயுதக் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இந்தியா உடனடியாகவே பாகிஸ்தானின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தது.

பாகிஸ்தான் வான்படையினர் ஏவுகணையின் நகர்வை தொடர்ச்சியாக அவதானித்ததாக தெரிவித்துள்ளனர்.  இந்த விவகாரம் தொடர்பில் ஜக்கிய நாடுகள் சபையில் பாகிஸ்தான் முறைப்பாடு செய்துள்ளது.