Home உலகச் செய்திகள் இந்தியா: போராட்டக் களத்திலிருந்து கலைந்து செல்லும் விவசாயிகள்

இந்தியா: போராட்டக் களத்திலிருந்து கலைந்து செல்லும் விவசாயிகள்

கலைந்து செல்லும் விவசாயிகள்

இந்திய தலைநகர் டெல்லியில் கடந்த ஓராண்டு காலத்துக்கும் மேலாக மூன்று புதிய வேளாண் மசோதாக்களை இரத்து செய்யுக் கோரி போராடிய வந்த விவசாயிகள், அச்சட்டம் இரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து தங்களது போராட்ட களத்திலிருந்து  வீடுகளுக்குத் திரும்ப ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில், டெல்லி ஹரியானா மாநில எல்லையில் உள்ள சிங்கு பகுதியிலிருந்து விவசாயிகள் கலைந்து செல்வதாக, காணொளியோடு தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது ஏ என் ஐ செய்தி முகமை.

மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட வேளாண் சட்டங்களை எதிர்த்து சிங்கு, திக்ரி, காஜிப்பூர் ஆகிய 3 இடங்களில் தற்காலிக குடியிருப்புகளை அமைத்து விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள். இதனால் டெல்லியை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைகள் முடங்கியது.

விவசாயிகள் போராட்டம் ஓராண்டை கடந்து நீடித்த நிலையில் பிரதமர் மோடி கடந்த மாதம் 26ம்திகதி திடீரென வேளாண் சட்டங்களை மீளப் பெறுவதாக அறிவித்தார். விவசாயிகளின் நிபந்தனைகளை ஏற்பதாகவும் உறுதிமொழி கொடுக்கப்பட்டது.

இதையடுத்து கலைந்து செல்லும் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு வீடுகளுக்கு திரும்ப ஆரம்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version