Tamil News
Home செய்திகள் இலங்கையின் நெருங்கிய அயல்நாடு என்ற அடிப்படையில் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக இந்தியா தெரிவிப்பு

இலங்கையின் நெருங்கிய அயல்நாடு என்ற அடிப்படையில் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக இந்தியா தெரிவிப்பு

இலங்கைக்கு ஆதரவளிப்பதாக இந்தியா தெரிவிப்பு

வரலாற்று தொடர்புகளை கொண்ட இலங்கையின் நெருங்கிய அயல்நாடு என்ற அடிப்படையில் இந்தியா இலங்கையின் ஜனநாயக ஸ்திரதன்மை பொருளதார மீட்சி ஆகியவற்றிற்கு முழுமையாக ஆதரவளிக்கின்றது என இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் அரின்டம் பக்சி தெரிவித்துள்ளார்.

இலங்கை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த  இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர்அரின்டம் பக்சி,

ஜனநாயக நடைமுறைகள் மூலம் வெளிப்படுத்தப்படும் இலங்கை மக்களின் சிறந்த நலன்களை அடிப்படையாக கொண்டே இந்தியா செயற்படும்

வரலாற்று தொடர்புகளை கொண்ட இலங்கையின் நெருங்கிய அயல்நாடு என்ற அடிப்படையில் இந்தியா இலங்கையின் ஜனநாயக ஸ்திரதன்மை பொருளதார மீட்சி ஆகியவற்றிற்கு முழுமையாக ஆதரவளிக்கின்றது.  அயல்நாடுகளிற்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இந்தியா இந்த வருடம் மாத்திரம் இலங்கை மக்கள் தங்கள் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக 3.5 பில்லியன் டொலர்களிற்கு மேல் உதவி வழங்கியுள்ளது. இதுதவிர மருந்து உணவு போன்ற அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறைகளிற்கு தீர்வை காண்பதற்காக இந்திய மக்கள் உதவிகளை வழங்கியுள்ளனர்.

ஜனநாயக நடைமுறைகள் மூலம் வெளிப்படுத்தப்படும் இலங்கை மக்களின் சிறந்த நலன்களை அடிப்படையாக கொண்டே இந்தியா செயற்படும்” என அவர் மேலும்  தெரிவித்துள்ளார்.

Exit mobile version