Tamil News
Home உலகச் செய்திகள் இந்திய – சீன எல்லையில் பதற்றம் தணிக்கப்பட வேண்டும்: ஐ.நா

இந்திய – சீன எல்லையில் பதற்றம் தணிக்கப்பட வேண்டும்: ஐ.நா

தவாங் பகுதியில் நிகழ்ந்த மோதலை அடுத்து, இந்திய – சீன எல்லையில் பதற்றம் தணிக்கப்பட வேண்டும் என்று ஐ.நா வலியுறுத்தியுள்ளது.

அருணாச்சலப் பிரதேச எல்லையில் உள்ள தவாங் பகுதிக்குள் கடந்த 9-ம் திகதி  நுழைய முயன்ற சீன துருப்புகளை இந்திய இராணுவம் விரட்டி அடித்த போது இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.  இந்திய இராணுவ வீரர்களின் தொடர் தாக்குதலை அடுத்து, சீன துருப்புகள் பின்வாங்கிச் சென்றன. இதனால், ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது என இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில்,இந்திய – சீன இராணுவ வீரர்களுக்கு இடையே நிகழ்ந்த மோதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐ.நா பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் துஜரிக், “இது தொடர்பான அறிக்கையைப் பார்த்தோம். பதற்றத்தைத் தணிக்க இருதரப்புக்கும் ஐ.நா அழைப்பு விடுக்கிறது. இந்த பிரச்சினை வளரக் கூடாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version