Home செய்திகள் இலங்கையில் அதிகரிக்கும் போராட்டங்கள்

இலங்கையில் அதிகரிக்கும் போராட்டங்கள்

இலங்கை அரசுக்கு எதிராக சிங்கள மக்களின் போராட்டங்கள்

தற்போதைய இலங்கை அரசுக்கு எதிராக சிங்கள மக்களின் போராட்டங்கள் அண்மைக்காலமாக அதிகரித்துச் செல்வதை அவதானிக்க முடிகின்றது.

இலங்கை எரிபொருள் நிறுவன ஊழியர்கள் இந்த வாரம் கொலன்னாவ எண்ணை சேமிப்பு நிலையத்திற்கு முன்பாக ஆர்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். திருமலை எண்ணைக்குதங்களை மீறப்பெறுதல் உட்பட பல கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்திருந்தனர்.

பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான ஊதியக் கொடுப்பனவு தொடர்பில் நாட்டின் பல பகுதிகளில் கடந்த இரு வாரங்களாக ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கடந்த வியாழக்கிழமை (4) இலங்கை தாதியர் சங்கம் ஊதிய அதிகரிப்பு கோரி கொகழும்பு தேசிய வைத்தியசாலைக்கு முன்பாக போராட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தது.

தற்போதைய அரசின் காலத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதால் ஊதிய அதிகரிப்பு கோரி பெரும்பாலான தொழிற்சங்கங்கள் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, கெரவலப்பிட்டியா மின் உற்பத்தி நிறுவனத்தை முறைகேடாக அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கியதற்கு எதிராகவும் சிங்கள அமைப்புக்களும், மக்களும் போராட்டத்தை முன்னெடுத்து வருவதுடன், அதற்கு எதிராக 3 வழக்குகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளன.நிதி நெருக்கடியை சந்தித்துவரும் இலங்கை அரசு பெருமளவான அரச உடைமைகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்து வருது இங்கு குறிப்பிடத்தக்கது.

Exit mobile version