திருகோணமலையில் அதிகரிக்கும் டெங்கு நோயாளர்கள்

IMG 20220508 WA0031 திருகோணமலையில் அதிகரிக்கும் டெங்கு நோயாளர்கள்

அதிகரிக்கும் டெங்கு நோயாளர்கள்

திருகோணமலை மாவட்டம்_கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவின் இடிமன் பகுதியில்  அதிகமான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருவதைத் தொடர்ந்து  அலுவலக சுகாதார பணியாளர்கள்  வீடுகளில் டெங்கு பரிசோதனை மேற்கொண்டனர் என  கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி மருத்துவர் எம். எச்.எம்.றிஸ்வி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பொது மக்கள் பின்வரும் விடயங்களை கடைப்பிடிக்குமாறும் அவர் கேட்டுள்ளார்.

அதாவது,இரண்டு நாட்களுக்கு மேல் குடம், வாளி மற்றும் நீல நிற பரல்களில் நீரை சேமித்து வைக்க வேண்டாம்.

ஒவ்வொரு முறையும் நீர் சேமிக்கும் கொள்கலன்களை பூரணமாக கழுவி சுத்தம் செய்த பின்னரே மீண்டும் நீரை சேகரித்தல் வேண்டும்.

ஒவ்வொரு நாளும் உங்கள் கிணறு, நீர் சேமிக்கும் கொள்கலன்கள், மலசலகூட வாளி, சுற்றுப் புறங்களில் நீர் தேங்கும் இடங்களை அவதானியுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும்  தொடர்ச்சியாக புகை விசுரும் நடவடிக்கையும் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.