இலங்கையில் அதிகரிக்கும் டெல்டா திரிபு

media handler இலங்கையில் அதிகரிக்கும் டெல்டா திரிபு

இலங்கையில் தற்போது கொரோனா வைரசின் டெல்டா திரிபு மிக வேகமாக பரவ ஆரம்பித்துள்ளதாக ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு, ஒவ்வாமை பிரிவின் பிரதானி மருத்துவர் சந்திம ஜீவந்தர  எச்சரித்துள்ளார்.

மருத்துவர் சந்திம ஜீவந்தர தனது ருவிட்டர் பக்கத்தில்,

கொழும்பு மாநகர எல்லைக்குள் அடையாளம் காணப்படும் கோவிட் தொற்றாளர்களில், 75 சதவீதம் பேருக்கு டெல்டா திரிபு தொற்றியுள்ளது. குறிப்பாக ஜுலை முதல் வாரத்தில் 19.3 சதவீதமாக இருந்த டெல்டா திரிபு, இறுதி வாரத்தில் 75 வீதம் வரை அதிகரித்துள்ளது.” என்று பதிவிட்டுள்ளார்.

இலங்கையில் கோவிட் தொற்றினால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் வெகுவாக அதிகரித்து வருகிறது.

இதுவரை இல்லாத அளவில் 94 கொரோனா மரணங்கள் கடந்த புதன்கிழமை ஒரே நாளில் பதிவானதாக, சுகாதார அமைச்சகம்  வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதன்படி, இலங்கையில் கோவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,821ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் இதுவரை 321,429 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவிக்கின்றது.

ilakku-weekly-epaper-140-july-25-2021