Home செய்திகள் இலங்கையில் ‘டெல்டா’ தொற்றாளர்களது எண்ணிக்கை அதிகரிப்பு – சுகாதார அமைச்சு

இலங்கையில் ‘டெல்டா’ தொற்றாளர்களது எண்ணிக்கை அதிகரிப்பு – சுகாதார அமைச்சு

V WHITE HOUSE FUND FOR VARIANTS 12P 00.00.00.00 இலங்கையில் 'டெல்டா' தொற்றாளர்களது எண்ணிக்கை அதிகரிப்பு - சுகாதார அமைச்சுஇலங்கையில் மேலும் 6 பேருக்கு டெல்டா கொரோனா பிறழ்வு தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்தார்.

இதன்படி நாட்டில் இதுவரை 24 டெல்டா நோயாளர்கள் அடையாளம் காணப் பட்டுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கொரோனாத் தொற்றிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கு பொது மக்கள் உரிய சுகாதார நடை முறைகளைப் பின்பற்ற வேண்டும் எனவும் அவர் சுட்டிக் காட்டினார்.

இந்த நிலையில், நாட்டில் டெல்டா கொரோனா வைரஸ் பிறழ்வு பரவியுள்ளமை தொடர்பில் ஆராய்வதற்காக மற்றுமொரு ஆய்வு முன்னெடுக்கப் பட்டுள்ளது என ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சால் வழங்கப்பட்ட கொரோனா நோயாளிகளின் 96 மாதிரிகளை கொண்டு இந்த ஆய்வு ஆரம்பிக்கப் பட்டுள்ளது என ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக் கழகத்தின் ஒவ்வாமை, நீர்பீடணம், உயிரணு தொடர்பான கற்கை நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இந்த மாதிரிகள் எழுமாறாகப் பெற்றுக் கொள்ளப் பட்டுள்ளன. இந்த ஆய்வுகளின் முடிவுகளை இன்னும் ஒரு வாரத்தில் வௌியிட எதிர் பார்த்துள்ளதாக சந்திம ஜீவந்தர மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இலக்கு இந்த வார மின்னிதழ் 138

Exit mobile version