பால் தேநீரின் விலை 100 ருபாயாக அதிகரிப்பு

பால் தேநீரின் விலை 100 ருபாயாக

பால் தேநீரின் விலை 100 ருபாயாக அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போதைய சூழ்நிலை காரணமாக சில உணவகங்களில் பால் தேநீர் விநியோகமும் இடைநிறுத்தப்பட உள்ளதாக சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், உள்ளூர் பால் மாவின் விலையை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என கால்நடை வளங்கள் இராஜாங்க அமைச்சர் டி.பி. ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், உள்ளூர் பால்மா உற்பத்தியை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பை ஒன்றின் விலையை 250 ஆக அதிகரிக்க பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் நேற்று (சனிக்கிழமை) நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, 400 கிராம் பால்மா பொதி ஒன்றின் புதிய விலை 790 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.