அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

மெல்பர்ன் நகரில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

அவுஸ்திரேலியாவில் இன்று  காலை 9:15 மணிக்கு மெல்பர்ன் நகரில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் மையப்பகுதி, மெல்பன் நகரிலிருந்து 180 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மான்ஸ்ஃபீல்ட் (Mansfield) என்ற இடத்தில் அமைந்திருந்தது என்று Geoscience Australia கூறியுள்ளது.

நில நடுக்கம் ஏற்பட்ட பின்னர் ஏற்படும் aftershock என்ற இரண்டாவது நடுக்கம் 4.0 அளவில் என்று தாம் பதிவு செய்துள்ளதாக Geoscience Australia மேலும் தெரிவித்துள்ளது.

சிட்னி, கன்பரா மற்றும் விக்டோரிய மாநிலத்தின் பல  பிராந்திய இடங்களிலும் நிலநடுக்கத்தின் தாக்கங்களை மக்கள் அனுபவித்ததாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றனர்.

அத்தோடு இன்று நிகழ்ந்த நில நடுக்கத்தின் விளைவாக சுனாமி ஏற்படும் அச்சுறுத்தல் இல்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தற்போது அமெரிக்காவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் Scott Morrison,  “பாதுகாப்புப் படை அல்லது தேவைப்படும் மற்றவர்களின் உதவியை வழங்குவதற்கு அரசு துணை நிற்கிறது” என்று கூறியுள்ளார்.

ilakku.org/ilakku-weekly-epaper-148-september-19-2021