தமிழர்களும் இஸ்லாமியர்களும் ஒன்றிணைந்து செயற்படுவது மிகவும் அவசியமானது : ரவூப் ஹக்கீம்

121 Views

ஒன்றிணைந்து செயற்படுவது மிகவும் அவசியமானது

தமிழ் மற்றும் இஸ்லாம் தரப்புகள் தேர்தல் உட்பட அனைத்து நடவடிக்கையிலும் ஒன்றிணைந்து செயற்படுவது மிகவும் அவசியமானது என   ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

யாழில் நேற்று நடைபெற்ற தமிழ்க் கட்சிகளுக்கு இடையிலான கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே ரவூப் ஹக்கீம் இதனைத் தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சி இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்காமை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், ஏற்கனவே தமிழரசுக் கட்சியுடனும் ஏனைய கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது என தெரிவித்துள்ளார்.

தமிழர்களும் இஸ்லாமியர்களும் அனைத்து நடவடிக்கையிலும் ஒன்றிணைந்து செயற்பட சாத்தியப் பாடுகள் இருக்கின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply