சர்வதேச நாணயநிதியத்தின் நிதி உதவி இரண்டாவது காலாண்டிலேயே கிடைக்கலாம் – அறிக்கை

இலங்கைக்கு நிதி உதவி வழங்குவதற்கான சர்வதேச நாணயநிதியத்தின்  நிறைவேற்று சபையின் ஒப்புதல் 2023 இன் இரண்டாம் காலாண்டு பகுதியிலேயே சாத்தியமாகும் என ஸ்டான்டர்ட் சார்டெட் குளோபல் ரிசேர்ச் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இலங்கையின் இருதரப்பு கடன்வழங்குநர்களிடமிருந்து நிதி தொடர்பான உத்தரவாதங்களை பெறுவதில் ஏற்பட்ட தாமதமே இவ்வாறான எதிர்வுகூறலிற்கு வருவதற்கு காரணம் என தெரிவித்துள்ள ஸ்டான்டர்ட் சார்டெட் குளோபல் ரிசேர்ச் இதனால் வர்த்தக கடன்வழங்குநர்களுடான பேச்சுவார்த்தைகள் தாமதமாகலாம் எனவும் தெரிவித்துள்ளது.

இவற்றின் காரணமாக இலங்கைக்கான சர்வதேச நாணயநிதியத்தின் உதவி இரண்டாவது காலாண்டு பகுதியிலேயே கிடைக்கலாம் என ஸ்டான்டர்ட் சார்டெட் குளோபல் ரிசேர்ச் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக கடன்மறுசீரமைப்பு  குறித்த உடன்படிக்கைகள் 2023 இறுதியிலேயே என எதிர்பார்க்கின்றோம் எனவும் என ஸ்டான்டர்ட் சார்டெட் குளோபல் ரிசேர்ச் தெரிவித்துள்ளது.

இலங்கையின் பொருளாதாரம் தொடர்ந்தும் வீழ்ச்சியை சந்திக்கலாம் எனவும் ஸ்டான்டர்ட் சார்டெட் குளோபல் ரிசேர்ச் எதிர்வுகூறியுள்ளது.