Tamil News
Home செய்திகள் இறக்குமதி தடை தொடர்ந்தால் ஜேர்மனியை சேர்ந்த நிறுவனங்கள் இலங்கையிலிருந்து வெளியேறும் – ஜேர்மன் தூதுவர்

இறக்குமதி தடை தொடர்ந்தால் ஜேர்மனியை சேர்ந்த நிறுவனங்கள் இலங்கையிலிருந்து வெளியேறும் – ஜேர்மன் தூதுவர்

இலங்கை இறக்குமதி தடையை தொடர்ந்தால் இலங்கையிலிருந்து ஜேர்மனியை சேர்ந்த நிறுவனங்கள் வெளியேறவேண்டியிருக்கும் என இலங்கைக்கான ஜேர்மனியின் தூதுவர் ஹொல்ஹெர் சியுபோட் எச்சரித்துள்ளார்.

இறக்குமதி தடை தொடர்பில் ஜேர்மனியை சேர்ந்த நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மேலும் இரண்டு வருடங்களிற்கு இறக்குமதி தடையை தொடர்ந்தால் ஜேர்மனியை சேர்ந்த பல நிறுவனங்கள் இலங்கையிலிருந்து வெளியேறும் நிலையேற்படலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்

ஜேர்மனியை சேர்ந்த பல நிறுவனங்கள் இலங்கையில் செயற்படுவது குறிப்பிடத்தக்கது அவை வாகன உதிரிபாகங்கள் உட்பட தங்களின் பல உற்பத்திகளை இலங்கையில் ஊக்குவிக்கின்றன.

டொலர் தட்டுப்பாடு காரணமாக இலங்கை பல  பொருட்களின் இறக்குமதிக்கு தடை விதித்துள்ளது

Exit mobile version