Tamil News
Home செய்திகள் மருந்துப் பற்றாக்குறையை உடனடியாக தீர்க்காவிட்டால் தேவையான சத்திரசிகிச்சைகளை நிறுத்த நேரிடும்-GMOA

மருந்துப் பற்றாக்குறையை உடனடியாக தீர்க்காவிட்டால் தேவையான சத்திரசிகிச்சைகளை நிறுத்த நேரிடும்-GMOA

தற்போதுள்ள மருந்துப் பற்றாக்குறையை உடனடியாக தீர்க்காவிட்டால் எதிர்காலத்தில் தேவையான சத்திரசிகிச்சைகளை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

மயக்க மருந்து இல்லாத காரணத்தினால் அத்தியாவசியமற்ற சில சத்திரசிகிச்சைகளை ஒத்திவைக்க முன்மொழியப்பட்டுள்ளதாக அதன் பேச்சாளர் சமில் சஞ்சீவ சுட்டிக்காட்டியுள்ளார்.

மயக்க மருந்து மற்றும் இதர உபகரணங்களின் தட்டுப்பாடு குறித்து பல மாதங்களுக்கு முன்பே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது என்றார்.

இதன்போது ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த அவர், நோயாளிகளின் உயிரைப் பாதுகாக்கும் வகையில் தற்போதுள்ள மருந்துகள் மற்றும் உபகரணங்களின் பற்றாக்குறைக்கு உடனடித் தீர்வை வழங்குமாறும் கோரிக்கை விடுத்தார்.

மேலும், சத்திரசிகிச்சைகளை கால தாமதம் செய்வதன் மூலம், அத்தியாவசியமற்ற சத்திர சிகிச்சை என்று கூறி, நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும், பொழுதுபோக்கிற்காக சத்திர சிகிச்சைகள் செய்வதில்லை என்றும், சில சத்திர சிகிச்சைகளை நொடிகளில் செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

Exit mobile version