அரசாங்கத்தில் எந்தவித பதவியையும் பெறமாட்டேன்-எம்.எஸ்.தௌபீக் எம்.பி தெரிவிப்பு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியிலேயே நான் தொடர்ந்திருப்பேன் அக்கட்சியின் தலைமைக்கு கட்டுப்பட்டு தலைவர் ரவூப் ஹக்கீமின்  தீர்மானத்திற்கமைவாகவே எனது எதிர்கால அரசியல் தீர்மானங்கள் அமையும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்.தெரிவித்தார்.

புதிய அமைச்சரவையில் எம்.எஸ்.தௌபிக் அவர்களுக்கும் அமைச்சுப் பதவி கிடைக்கவுள்ளதாக தகவல் கிட்டியதைத் தொடர்ந்து அவரிடம் தொலை பேசியில் தொடர்பு கொண்டு  பிரதி சபாநாயகர் கிடைப்பதென்பது உண்மையா? என வினவியபோது, அவ்வாறான தீர்மானம் எதுவும் தனக்கில்லை அரசாங்கம் கொண்டு வருகின்ற பிரேரணைகளுக்கோ அமைச்சுப் பதவியைப் பெறும் தீர்மானம் தன்னிடம் எதுவுமில்லை எனத் தெரிவித்தார்.

நான் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியிலேயேதான் இருக்கிறேன் கட்சி என்னை நீக்கவுமில்லை கட்சியை விட்டு நான் விலகவுமில்லை கட்சியின் தலைமைக்கு கட்டுப்பட்டே செயற்பட்டு வந்துள்ளேன். இனிமேலும் அவ்வாறுதான் செயல்படுவேன். எந்தவித பதவியையும் பெறமாட்டேன் என்றார்.

20 ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த குறித்த பாராளுமன்ற உறுப்பினரே இவ்வாறு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Tamil News