Home உலகச் செய்திகள்  பிலிப்பைன்ஸை தாக்கிய   சூறாவளி- சுமார் ஒரு இலட்சம் மக்கள் வெளியேற்றம்

 பிலிப்பைன்ஸை தாக்கிய   சூறாவளி- சுமார் ஒரு இலட்சம் மக்கள் வெளியேற்றம்

ஒரு இலட்சம் மக்கள் வெளியேற்றம்

ஒரு சக்திவாய்ந்த சூறாவளி  பிலிப்பைன்ஸின் தென்கிழக்கு பகுதியை கடக்கத் தொடங்கியுள்ளது.

இதனால் திடீர் வெள்ளம், நிலச்சரிவு மற்றும் பேரழிவுக்கு உள்ளாகக்கூடிய அதிக ஆபத்தான பகுதிகளிலிருந்து சுமார் ஒரு இலட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக அந் நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சூறாவளிக்கு “ராய்” என்று பெயரிடப்பட்டதுடன், மணிக்கு 185 கிலோ மீற்றர்(115 மைல்) வேகத்தில்  இதன் வேகம் அமைந்ததாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

உயிரிழப்புக்கள் அல்லது பெரிய சேதங்கள் பற்றிய உடனடி அறிக்கைகள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் இராணுவம் மற்றும் கடலோர காவல்படை மீட்பு பணியாளர்கள் குடியிருப்பாளர்களுக்கு உதவி வருகின்றனர்.

இந்த ஆண்டு பிலிப்பைன்ஸைத் தாக்கும் 15ஆவது புயல் ராய் என்று கூறப்படுகின்றது.

Exit mobile version