Tamil News
Home செய்திகள் நெருக்கடியின் விளிம்பில்  இலங்கை- நாட்டைவிட்டு வெளியேறத் தயாராகும் நுாற்றுக்கணக்கானவர்கள் -ஏபிசி தகவல்

நெருக்கடியின் விளிம்பில்  இலங்கை- நாட்டைவிட்டு வெளியேறத் தயாராகும் நுாற்றுக்கணக்கானவர்கள் -ஏபிசி தகவல்

இலங்கை மனிதாபிமான நெருக்கடியின் விளிம்பில் இருக்கும் நிலையில், நுாற்றுக் கணக்கானவர்கள் அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோத பணயங்களை மேற்கொள்ள தயாராகின்றனர் என ஏபிசி தெரிவித்துள்ளது.

இலங்கையின்  பொருளாதார நிலை மோசமடைந்துள்ளதால் 300க்கும் அதிகமான இலங்கையர்கள் அவுஸ்திரேயாவிற்கு புறப்பட தயாராகியுள்ளனர். புதிய தொழில் கட்சி அரசாங்கம் காரணமாக படகில் உள்ளவர்கள் அவுஸ்திரேலியாவிற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என ஆட்கடத்தல்காரர்கள் அவர்களிடம் தெரிவித்துள்ளனர்.

அனேகமான படகுகளை இலங்கை கடற்படையினர் இடைமறித்துள்ளனர்.

நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது, முடிவடையும் நிலையில் மருந்துகள் உணவுப் பொருட்கள் எரி பொருட்கள் காணப்படுவதால் மேலும் பலர் அவுஸ்திரேலியாவிற்கான  பயணத்தை ஆரம்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

புகலிடக் கோரிக்கையாளர்கள் நிறைந்த படகுகளை  கடலில் இலங்கை கடற்படையினர் தடுத்து நிறுத்தும் காட்சிகள் ஏபிசிக்கு கிடைத்துள்ளன என்று கூறப்பட்டுள்ளது.

தொழில்கட்சி புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் முன்னைய அரசாங்கத்தின் கொள்கைகளுக்குத் ஒப்பான கொள்கைகளேயே பின் பற்றுகின்ற போதிலும் புதிய அரசாங்க மாற்றத்தை ஆட்கடத்தல்காரர்கள் தங்களிற்கு சாதகமாக பயன்படுத்துகின்றனர்.

அவுஸ்திரேலியாவின் கொள்கை உறுதியானது என அவுஸ்திரேலிய எல்லைப்படை ஏபிசிக்கு தெரிவித்துள்ளது.

மேலும் அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக செல்பவர்கள் அங்கு நிரந்தரமாக தங்க அனுமதிக்கப்படமாட்டார்கள் என அவுஸ்திரேலிய எல்லை காவல்படை தெரிவித்துள்ளது.

Exit mobile version