மனித உரிமை மீறல் – சிரியா கேணலுக்கு ஜேர்மனியில் தண்டனை

மனித உரிமை மீறல்

மனித உரிமை மீறல்: சிரியாவில் இடம்பெற்ற உள்நாட்டு போரில் அந்த நாட்டின் அரச தலைவர் பசீர் அல் அசாட்டின் ஆலோசகராக இருந்ததுடன், சிறைகளில் 4000 இற்கு மேற்பட்ட மக்களை துன்புறுத்தி அதில் பலரை படுகொலை செய்ததற்காக சிரியா நாட்டு படை அதிகாரியான கேணல் அன்வர் ரஸ்லானுக்கு (58) ஜேர்மன் நீதி மன்றம் இந்த வாரம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் பேரணிகளை நடத்தியவர்கள் மற்றும் எதிர் தரப்பினர் என பெருமளவான மக்களை கைது செய்து தடுத்து வைக்கும் நடவடிக்கைகளுக்கு இவரே தலமை தாங்கியிருந்தார்.

அவ்வாறு தடுத்து வைக்கப்பட்டவர்களில் 4000 இற்கு மேற்பட்டவர்கள் துன்புறுத்தப்பட்டுள்ளதுடன்இ 58 பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். பலர் பாலியல் துன்புறுத்தல்களுக்கும் உட்பட்டிருந்ததாக பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

சிரியாவில் இருந்து தப்பி வந்த அன்வர் ஜேர்மனியில் புகலிடத்தஞ்சம் கோரியிருந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டிருந்தார். ஜேர்மனியில் 800,000 சிரிய மக்கள் வாழ்வது குறிப்பிடத்தக்கது.

Tamil News