மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தொழிற்சங்கவாதிகள் பத்திரிகையாளர்கள் கைது- ஐநாவின் அறிக்கையாளர்கள் கவலை

மனித உரிமை செயற்பாட்டாளர்கள்

மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தொழிற்சங்கவாதிகள் பத்திரிகையாளர்கள் கைதுசெய்து தடுத்துவைக்கப்படுதல் அச்சுறுத்தப்படுதல் குறித்த கரிசனையை ஐநாவின் விசேட அறிக்கையாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில்,

தங்கள் கரிசனையை வெளியிட்டுள்ளதாக மனித உரிமை பாதுகாவலர்கள் குறித்த ஐக்கியநாடுகளின் விடேச அறிக்கையாளர் மேரிலோவ்லர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

மனித உரிமை ஆர்வலர்கள் பத்திரிகையாளர்கள் தொழிற்சங்கவாதிகள் கண்மூடித்தனமாக தடுத்துவைக்கப்படுதல் அச்சுறுத்தப்படுதல் குறித்து நானும் ஐநாவின் ஏனைய நிபுணர்களும் கூட்டாக இலங்கை அரசாங்கத்திற்கு கடிதமொன்றை எழுதியிருந்தோம்.

மனித உரிமை பாதுகாவலர் சுதேஸ் நந்திமல் சில்வா பத்திரிகையாளரும் மனித உரிமை ஆர்வலருமான தரிந்து ஜெயவர்த்தன, தொழிற்சங்க தலைவர் ஜோசப் ஸ்டாலின் ஆகியோர் குறித்தே நாங்கள் எங்கள் கடிதத்தில் சுட்டிக்காட்டியிருந்தோம்.

மனித உரிமை பாதுகாவலர்களிற்கு எதிரான மிரட்டல்கள் அச்சுறுத்தல்கள் அவர்கள் கண்மூடித்தனமாக தடுத்துவைக்கப்படுதல் குறித்து நாங்கள் ஆழ்ந்த கரிசனையை வெளியிட்டிருந்தோம்.

இந்த அச்சுறுத்தல்களிற்கு எதிராக வலுவான விதத்தில் பதில் நடவடிக்கை எடுப்பதற்கும் அவற்றினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை தடுப்பதற்கும் இலங்கை அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்காமல் செயலற்று காணப்படுகின்றது என்ற எண்ணப்பாடு இந்த கரிசனைகளை மேலும் தீவிரப்படுத்துகின்றது. குறிப்பாக சில்வா மற்றும் பெரேரா விடயத்தில். இந்த செயலற்ற தன்மை அவர்களிற்கு உடல் மற்றும் உளரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது.

மேலும் இது பழிவாங்கப்படுவோம் என்ற அச்சமின்றி சமூகத்தின் உறுப்பினர்கள் தண்டனையிலிருந்து விடுவிக்கப்படுவதை எதிர்க்கலாம், நீதியை கோரலாம் என கருதும் ஒரு சூழலை ஏற்படுத்துவதற்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.

ஒன்றுகூடலிற்கான தங்கள் சுதந்திரத்தை பயன்படுத்திமைக்காக ஸ்டாலினும் ஏனைய ஆர்ப்பாட்டக்காரர்களும் கண்மூடித்தனமாக கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின்றி தனிமைப்படுத்தப்பட்டமை குறித்த எங்கள் கரிசனையை வெளியிடுகின்றோம். கோவிட்டிற்கு எதிரான நடவடிக்கைள் என்ற பெயரில் இந்த செயற்பாடுகள்இடம்பெற்றுள்ளன.

கருத்துசுதந்திரம் ஒன்றுகூடல்களிற்கான உரிமைகளை சட்டபூர்வமாக பயன்படுத்துவதை தடுப்பதற்காகவும். இது போன்ற சுகாதார நடவடிக்கைகள் தவறாக பயன்படுத்தப்படுகின்றன என்ற கரிசனையை இது உருவாக்கியுள்ளது என்று கூறியுள்ளார்.

  ilakku Weekly Epaper 153 october 24 2021 Ad மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தொழிற்சங்கவாதிகள் பத்திரிகையாளர்கள் கைது- ஐநாவின் அறிக்கையாளர்கள் கவலை