Tamil News
Home ஆய்வுகள் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்கள்…….? பி.மாணிக்கவாசகம்

எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்கள்…….? பி.மாணிக்கவாசகம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய பிரச்சினையை மீண்டும் அரசாங்கம் கையில் எடுத்திருக்கின்றது. குறிப்பாக பொறுப்பு கூறும் விவகாரம் தொடர்பில் ஐநா மனித உரிமைப் பேரவை நெருப்பெடுக்கும்போது இத்தகைய நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபடுவது வழக்கம் அந்த வகையிலேயே இப்போதும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய பிரச்சினையில் அரசாங்கம் கவனம் செலுத்தி இருக்கின்றது.

ஐநாவின் நிலைமாறுகால நீதியை நிலைநாட்டுவதற்கான பொறிமுறைகளை உருவாக்கி அவற்றின் ஊடாக பொறுப்பு கூறுவதற்கான கடப்பாட்டை நிறைவேற்றுமாறு வலியுறுத்தப்பட்டிருந்தது. அப்போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையிலான பொறிமுறையாக அலுவலகம் ஒன்றை அரசாங்கம் உருவாக்கியது.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அந்த அலுவலகப் பொறிமுறையைப் பாதிக்கப்பட்டவர்களாகிய காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய உறவினர்களின் பங்கேற்புடன் உருவாக்க வேண்டும் என ஐநா மனித உரிமைப் பேரவை அறிவுறுத்தி இருந்தது. ஆனால் அந்த வழிகாட்டல் அறிவுரையை அரசாங்கம் கவனத்திற் கொள்ளவில்லை. பாதிக்கப்பட்ட தரப்பினருடைய இணக்கப்பாட்டுடன் கூடிய பங்களிப்பு இல்லாமலேயே காணாமல் போனோருக்கான அலுவலகம் உருவாக்கப்பட்டது.

அந்த அலுவலகத்தை உருவாக்குவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டபோதே பாதிக்கப்பட்டவர்கள் அந்தப் பொறிமுறை மீது நம்பிக்கை கொள்ளவில்லை. அந்தப் பொறிமுறையை உருவாக்குவதற்கான அரசாங்கத்தின் முயற்சி ஒரு கண்துடைப்பு நடவடிக்கையாகவே அவர்களால் நோக்கப்பட்டது. அந்த அலுவலகத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளும் ஆமை வேகத்திலேயெ இடம்பெற்றன.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் உருவாக்கப்பட்டதாக அரசாங்கம் அறிவித்ததன் பின்னர் காலம் தாழ்த்தியே அதற்கான ஆளணி நியமிக்கப்பட்டது.. அந்த ஆளணியில் பாதிக்கப்பட்டவர்களுடைய பிரதிநிதிகள் உள்ளடக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனை பாதிக்கப்பட்டவர்களின் திருப்திக்கு ஏற்ற வகையில் நிறைவேற்றப்படவில்லை. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பது கண்டறியப்பட வேண்டும். ஆட்கள் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்பதே பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கை. ஆனால் அந்த கோரிக்கையை நிறைவேற்றத்தக்க வகையில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தின் செயற்பாடுகள் வடிவமைக்கப்படவில்லை என்பது பாதிக்கப்பட்டவர்களின் குற்றச்சாட்டு.

இதனால் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலக உருவாக்கம் கருக்கொண்டபோதே அரசாங்கத்தின் அந்த நடவடிக்கையில் பாதிக்கப்பட்டவர்கள் நம்பிக்கை இழந்திருந்தார்கள். இந்த நம்பிக்கை இழப்பு அந்த அலுவலகச் செயற்பாடுகளை முற்றாகப் புறக்கணிக்கும் வகையில்; அமைந்திருந்தது. கொழும்பில் தலைமையகத்தையும் வடக்கு கிழக்கு மாவட்டங்களில் பிரர்நதிய அலுவலகங்களையும் கொண்டாக அந்த அலுவலகம் செயற்படுவதற்கான ஆயத்தங்கள் செய்யப்பட்டபோது அதனை பாதிக்கப்பட்டவர்கள் வெளிப்படையாகவே எதிர்த்திருந்தார்கள். அரசாங்கம் இந்த விடயத்தில் நியாயமாகவும் நேர்மையாகவும் செயலாற்றவில்லை என்பதே அவர்களின் எதிரப்புக்குக் காரணமாகும்.

வடமாகாணத்தில் பிராந்திய அலுவலகங்கள் திறக்கப்பட்டபோது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பகிரங்கமாக அதனை எதிர்த்தார்கள். இதனால் இரகசியமாக அந்த பிராந்திய அலுவலகங்களை அதிகாரிகள் திறந்து வைத்தனர். யாழ்ப்பாணப் பிராந்திய அலுவலகம் பாதிக்கப்பட்டவரிகளின் பிரசன்னம் இல்லாமல் அதிகாலை ஆ,ற ஆறரை மணியவில் அதிகாரிகளினால் அலுவலகம் திறக்கப்பட்டதில் இருந்து அரசாங்கத்தின் முயற்சிக்குக் கிடைத்திருந்த வரவேற்பு எத்தகையது என்பதைப் புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்;தது.

இந்த அலுவலகம் திறக்கப்படுவதற்கு முன்னதாக கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழு நியமிக்கப்பட்டபோது. காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய விவகாரம் தொடர்பில் விசாiணைகள் முன்னெடுக்கப்பட்டன. அந்த ஆணைக்குழுமீது நம்பிக்கை வைத்து பாதிக்கப்பட்டவர்கள் தமது சாட்சியங்களை வழங்கியிருந்தனர். ஆனால் அந்த ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த பரிந்துரைகள் முறையாக அரசாங்கத்தினால் நிறைவேற்றப்படவில்லை.

ஆந்த ஆணைக்குழுவைத் தொடர்ந்து மேலும் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் விசாரணைகளும் ஆட்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமைக்கு நீதி வழங்கவில்லை. சாட்சியமளித்தவர்களுக்கு நியாயமும் கிடைக்கவில்லை. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது எவ்வாறு காணாமல் போனார்கள் என்பது பற்றிய விசாரணை குழுக்களின் விசாரணையாளர்கள் விடுதலைப்புலிகள் மீது குற்றம் கா,ணும் வகையிலான விசாரணைக் கேள்விகளிலேயே அதிக நாட்டம் கொண்டிருந்தனர். படையினர் நேரடியாக சம்பந்தப்பட்ட சம்பவங்களைக்கூட அவர்கள் கவனத்திற் கொள்ளத் தயாராக இல்லாத போக்கிலேயே விசாரணைகள் நடைபெற்றன.

விசாரணைகளில் ஆங்கிலத்தில் கேட்கப்பட்ட கேள்விகள் சரியான முறையில் தமிழாக்கம் செய்யப்படவில்லை. அதேபோன்று சாட்சியமளித்தவர்களின் கூற்றுக்கள் அவர்கள் தெரிவித்தவாறு ஆங்கிலத்தில் விசாரணையாளர்களுக்கு மொழிபெயர்த்து கூறப்படாத குறைபாடும் காணப்பட்டது. இது போன்ற நிலைமைகளினால் ஆணைக்குழு விசாரணைகளில் பாதிக்கப்பட்டவர்கள் ஏமாற்றத்திற்கு உள்ளாகியதே மிச்சமாகியது.

அது மட்டுமல்லாமல் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு ,குறிப்பாக இறுதி யுத்தத்தின்பொது இராணுவத்தினரிடம் சரணடைவதற்காக குடும்ப உறவுகளினால் படை அதிகரிரகளிடம் பலர் முன்னிலையில் கையளிக்கப்பட்டவர்களுக்கும் என்ன நடந்தது என்பதைக் கண்டறியும் வசையில் விசாரணைகளின் போக்கு அமையவில்லை. ஆதாரம் மிக்கவகையில் இராணுவத்திடம் சரணடைந்தவர்கள் குறித்து ஆணைக்குழுக்கள் படை அதிகரிரகளிடம் விசாரணைகளை முன்னெடுக்கவில்லை. அதேவேளை காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு மரணச் சான்றிதழ் வழங்குவதிலும், அதனடிப்படையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளக்கு இழப்பீடாக பணத்தொரைக வழங்குவதை வலியுறுத்துவதிலும் விசாரணையாளர்கள் தீவிர கவனம் செலுத்தியிருந்தனர். இதுபோன்ற காரணங்களினால் அரசாங்கத்தின் ஆணைக்குழுக்களின் விசாரணைகளில் தங்களுக்கு நீதியம் நியாயமும் கிடைக்கப் போவதில்லை என பாதிக்கப்பட்டவர்கள் உறுதியாக நம்பினார்கள். இது அரசாங்க்தின் உள்ளக விசாரணைகளில் முற்றாக நம்பிக்கை இழக்கும் நிலைமைக்கு அவர்களை ஆளாக்கியது. அத்துடன் சர்வதேச விசாரணைகளின் மூலNடீ தங்களுக்கு நியாயம் கிடைக்கும் என்று தீர்க்கமாகத் தீர்மானிக்கும் நிலைமைக்கு அவர்கள் தள்ளப்பட்டார்கள். இதனால் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கேட்டு ஆரம்பிக்கப்பட்ட போராட்டங்கள் சர்வதேச விசாரணைகளை வலியுறுத்தின. வலியுறுத்தி தொடர்ச்சியாகப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதைக் கண்டறியும் போக்கிலான அரசாங்கத்தின் விசாரணை நடவடிக்கைகள் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக இரண்டு இலட்சம் ரூபா பணம் வழங்கப்படும் என்ற அறிவிப்புடன் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. முன்னர் இந்த இழப்பீட்டுத் தொகை ஒரு இலட்சம் ரூபாவாகத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. அந்தத் தொகையைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் காணாமல் போயுள்ளார் என்ற சான்றிதழும் வழங்கப்பட்டது. புதிய ஏற்பாட்டின்படி காணாமல் போயுள்ளதற்கான சான்றிதழமைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனை விரும்பினால் அதனை ஏற்றுக்கொள்ளலாம். அது கட்;டாயமில்லை என தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழு மீண்டும் விசாரணைகளை நடத்தத் தொடங்கியிருக்கின்றது. காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்று பத்து பதின்மூன்று வருடங்கள் கழிந்துவிட்டன. ஏற்கனவே பல தடவைகள் இது குறி;த்த விசாரணைகள் நடத்தப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில் புதிய விசாரணைகளின் மூலம் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் புதிதாக எதனை அரசாங்கம் கண்டறியப் போகின்றது என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வினவுகின்றார்கள். அந்த வினா ஆழமான பொருள் பொதிந்தது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் அரசாங்கங்கள் கடைப்பிடித்து வருகின்ற கொள்கையின் உள்நோக்கத்தை தோலுரித்துக் காட்ட முற்படும் வகையில் அந்த வினா அமைந்துள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு இரண்டு இலட்சம் ரூபா இழப்பீடு வழங்கப்படும் என்ற அரசாங்கத்தின் அறிவித்தல் பாதிக்கப்பட்டவர்களைச் சீற்றத்திற்கு உள்ளாக்கியிருப்பதையே காண முடிகின்றது. ஆடு மாடுகள் காணாமல் ஆக்கப்படவில்லை. தமது உறவுகளே வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு இழப்பீட்டைத் தாங்கள் கோரவில்லை. தங்களுக்கு இழப்பீட்டுப் பணம் தேவையில்லை நீதி வழங்கப்பட வேண்டும் என்பதையெ கோருகின்றோம் என அவர்கள் கூறுகின்றார்கள்.

வீடுகளிலும் வீதிகளிலும் வைத்துப் பிடித்துச் செல்லப்பட்டவர்களும் சரணடைவதற்காகத் தங்களால் கையளிக்கப்பட்டவர்களுமே காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்து அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டும். ஆட்களை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமைக்கு பொறுப்பானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்.  என்பதே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வேண்டுகோள். காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாகப் பணம் எங்களுக்குத் தேவையில்லை என அவர்கள் கூறுகின்றார்கள்.

மாறி மாறி ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசிய கட்சயினருடைய காலத்திலும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியினருடைய காலத்திலுமே ஆட்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டனர். படை அதிகாரிகளிடம் சரணடைந்தவர்கள் காணாமல் ஆக்கப்பட்டதும் இப்போது பொதுஜன பெரமுன என்ற கட்சியைச் சேர்ந்தவர்களாகிய சிறிலங்கா சுதந்திரக் கட்சியினருடைய ஆட்சியிலேயே நடைபெற்றது. ஆட்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை இப்போது ஆட்சியில் உள்ளவர்களுக்குப் புதிய விடயமல்ல.

முன்னர் அவர்கள் தொடர்பில்; விசாணைகளை நடத்தியை ஆணைக்குழுக்கள் செயற்பட்ட காலப்பகுதியிலும் இந்த இரண்டு கட்சகளைச் சேர்ந்தவர்களுமே மாறி மாறி ஆட்சியில் இருந்தனர். எனவே இது .குறித்து அவர்கள் தங்களுக்கு எதுவும் தெரியாது என்ற தோரணையில் புதிய ஆணைக்குழுவையோ விசாரணைக்குழுவையோ அமைத்து விசாரணை நடத்துவது என்பது ஒதுபோதும் உண்மையைக் கண்டறிவதற்காக அல்ல என்பது தெளிவாகத் தெரிகின்றது.

ஐநா மனித உரிமைப் பேரவையில் நிளைவேற்றப்பட்டுள்ள புதிய தீர்மானத்தின் அடிப்படையில் அரசாங்கத்திற்கு அழுத்தங்கள் வருவதை சமாளிப்பதற்கும் அவற்றைத் திசை திருப்புவதற்குமாகவே புதிய விசாரணைகளை அரசு முடுக்கிவிட்டிருக்கின்றது என்பது தெளிவாகத் தெரிகின்றது.

Exit mobile version