தாயக மேம்பாடு நேற்று இன்று நாளை – யாழ். மாவட்ட குளங்களும் ஆறுகளும்

தாயக மேம்பாடு: யாழ்.மாவட்டம்

தாஸ்

தாயக மேம்பாடு: யாழ்.மாவட்டம்தாயக மேம்பாடு: யாழ்.மாவட்டம் கொழும்பிலிருந்து 410 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள யாழ்ப்பாண மாவட்டமானது, ஏழு திறவுகளைக் கொண்ட பிரதேசமாகும். வடக்கு, கிழக்கு, மேற்குப் பகுதிகளில் இந்து சமுத்திரத்தை எல்லையாகக் கொண்ட ஒரு இடமாகும். பருத்தித்துறை 15.4மீட்டர், மயிலிட்டி 10.9 மீட்டர், கொக்குவில் 6.9, மீட்டர் கடல் மட்டத்திலிருந்து உயரமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தாயக மேம்பாடு: யாழ்.மாவட்டம்யாழைப் பொறுத்தவரையில், 13ஆம் நூற்றாண்டில் நல்லூரைத் தலைநகராக தோன்றிய மன்னராட்சி, பின்னர் ஆரியச்சக்கரவர்த்தி அதனைத் தொடர்ந்து சுதேச மன்னர்களும் ஆட்சி புரிந்து வந்தனர். யமுனா ஏரி, சங்கிலியன் தோப்பு மந்திரமலை போன்ற வரலாற்று முக்கியம் வாய்ந்த இடங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது.

யாழ்.மாவட்டம்பிரித்தானிய ஆட்சியில் கட்டப்பட்ட மணிக்கூட்டுக் கோபுரம் ஒன்று இன்றும் உள்ளது குறிப்பிடத்தக்கது. பிரபலமான பாரம்பரியமிக்க  பாடசாலைகள்,  வரலாற்று முக்கியமான கல்லூரிகள், இடங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. நல்லூர் கந்தசாமி கோயில், வைத்தீஸ்வரர் கோயில்,  பெருமாள் கோயில், யாழ் கோட்டை போன்ற இடங்கள் யாழ் மண்ணின் முக்கியமான இடங்களாகும்.

யாழ்.மாவட்டம்சிவந்தமண், மார்சன் கலந்த லட்சோபா மண், மத்திய நிலப்பரப்பில் 60,000 ஹெக்டேயர் நிலத்தடி நீர் சுண்ணாம்புப் பாறைகளைக் கொண்டுள்ளது. எனவே இதன் புவியியல் அமைப்பு காரணமாக நீர்த்தேக்கங்கள் யாழ்மாவட்டத்தில் அமைக்க முடியாது.

நிலத்தடி நீர்த் தேக்கங்களைப் பொறுத்தவரையில் வடமராட்சி, தென்மராட்சி, ஊர்காவல்துறை, வலிகாமம் பகுதிகளில் காணப்படுகின்றது. இதிலிருந்து ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பில் 1,250 கன மில்லியன் லீட்டர் நீர் கிடைக்கின்றது..

யாழ்.மாவட்டம்

யாழ் மாவட்டத்தைப் பொறுத்தவரையில், 150 கன மில்லியன் லிட்டர் நீர் விவசாயத்துக்குத் தேவையாக உள்ளது. 30 சதவீதம் நீர் யாழ் மாவட்டத்தில் வீணாக கடலில் கலக்கின்றது. 50 சதவீதமான நீர் ஆவியாகின்றது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு குளங்கள் யாழ் மாவட்டத்தில் உள்ளது. பல குளங்கள் தூர்வடைந்து காணப்படுகின்றது. வடமராட்சியைப் பொறுத்தவரையில் நீரேந்து பிரதேசம்155 சதுர மைல். நீர் பரப்பு 30 சதுரமைல். பிரதான கதவுகள் 18, துணைக் கதவுகள் 16 உள்ளது. யாழ்குடாநாட்டின் கரையோரத்தில் 34 தடுப்பணைகள் காணப்படுகின்றன. இவை பெரும்பாலானவை பழுதடைந்த நிலையில் காணப்படுகின்றது.

யாழ்.மாவட்டம்

யாழ் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் குழாய்க் கிணறு அமைத்து நீர் பெறுவதை கட்டுப்படுத்த வேண்டி உள்ளது. கழிவு நீர் அமைப்பை கட்டுப்படுத்த வேண்டியுள்ளது. இரசாயன உரப் பாவனையைக் கட்டுப்படுத்த வேண்டும். நீர் சேமிப்பு தொழில்நுட்பங்களை ஊக்குவிக்க வேண்டும். சுண்ணாம்பு மணல் மேடுகளைப் பாதுகாக்க வேண்டும். வீடுகள் தோறும் மழைநீர் சேகரிப்பு தாங்கிகள் அமைக்க வேண்டும்.

மேம்பாடு யாழ்.மாவட்டம்10 தாயக மேம்பாடு நேற்று இன்று நாளை - யாழ். மாவட்ட குளங்களும் ஆறுகளும்

இவ்வாறான வேலைகளை பல்கலைக்கழகம், விவசாய திணைக்களம், தேசிய நீர் வடிகாலமைப்பு சபை, யாழ் மாநகர சபை உட்பட அனைவரும் பொறுப்புடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

யாழ்.மாவட்டம்

யாழ் மாவட்டத்தின் மண்வளம், நீர்வளம் முழுமையாகப் பேணிப் பாதுகாக்க வேண்டும். இன்று யாழ்மாவட்டம் 1,94,053 குடும்பம் வாழும் இடமாகவும், 435 கிராம சேவையாளர் பிரிவாகவும், 1,453 கிராமங்களையும் கொண்டுள்ளது. இந்த மக்களின் வளத் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டுமாயின், அனைவரும் பொறுப்புணர்வுடன் இணைந்துசெயற்பட வேண்டும்.

யாழ்.மாவட்டம்

1569 ஏக்கர் தென்னைச் செய்கை நிலம் உள்ளது. 113 மீன்பிடிக் கிராமங்கள் உள்ளது. இவை முழுமையாக பயன்படுத்தப்படவில்லை. எனவே இவை யாவையும் கருத்தில் கொண்டு  எல்லோரும் இணைந்து நமது நாட்டையும் வளங்களையும் பாதுகாக்க உணர்வுடன் செயல்படுவோம்.