தாயக மேம்பாடு – அம்பாறை மாவட்டம் – தாஸ்

தாயக மேம்பாடு
தாஸ்

தாயக மேம்பாடு-அம்பாறை மாவட்டம்: அம்பாறை மாவட்டமானது, இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் மிகவும் முக்கியமான ஒரு மாவட்டமாகும். தமிழர் சிங்களவர் மற்றும் முஸ்லிம் மக்கள் வாழும் மாவட்டமாகும்.

அம்பாறை மாவட்டமானது 1961 நிர்வாக மாவட்டமாக உருவாக்கப்பட்டு தேசிய விவசாய உற்பத்தி அதிகம் உள்ள மாவட்டம் ஆகும்.

உவர் நீர் மற்றும் நன்னீர் மீன்பிடி அதிக அளவில் நடைபெறும் மாவட்டம் ஆகும். முன்னர் திகாமடு பெயரைக்கொண்ட குடியேற்ற மாவட்டம் பின் அம்பாறை என பெயர் மாற்றப்பட்டது.

தாயக மேம்பாடு20 உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளையும், 503 கிராமசேவகர் பிரிவுகளையும், 614 கிராமங் களையும் கொண்ட மாவட்டம் ஆகும்.

இந்த மாவட்டத்தில் 199 விகாரைகளும், 186 இந்து ஆலயங்களையும், 338 பள்ளிவாசல்களையும், 66 கிறிஸ்தவ ஆலயங்களை கொண்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் 2,05,211 குடும்பங்களை சேர்ந்த 7,19,462 மக்கள் இங்கு வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் 44% வீதம் முஸ்லிம் மக்களும் 38.4% வீதம் சிங்கள மக்களும்   17.1% வீதம் தமிழ் மக்களும் இங்கு வசிக்கின்றனர். ஏனைய இனத்தவர்கள் 0.5% வீதமாக உள்ளனர். அம்பாறை மாவட்டத்தில் 2,13,300 ஹெக்டேரில் மக்கள் குடியேற்றம் உள்ளது.

இங்கு அமைந்துள்ள சேனநாயக்கா நீர்த்தேக்கம் ஆனது இலங்கையில் உள்ள மிகப்பெரிய நீர்த்தேக்கங்களில் ஒன்றாகும். இது அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள காரணத்தினால் நன்னீர் மீன்பிடி மற்றும் அது சார்ந்த உற்பத்தியில் தன்னிறைவு கண்டுள்ளது.

தாயக மேம்பாடுபல்கலைக்கழகம், தொழில்நுட்ப கல்லூரி, கல்வியல் கல்லூரியில் தேசிய பாடசாலை போன்றவையும் இங்கு இம்மாவட்டத்தில் அமைந்துள்ளது.

கல்லோயா தேசிய பூங்கா, குமண தேசிய பறவைகள் பூங்கா, லாகுரை தேசிய பூங்கா,  அனுகம்பை சர்வின் கரையோரம் போன்றவை மிக பிரபலமான சுற்றுலாத் தலங்கள் ஆகும். இவை உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அதிகளவில் கவர்ந்திழுக்கும் இடமாகவும் உள்ளது.

தாயக மேம்பாடுஅம்பாறை மாவட்டத்தில் 88,100 ஹெக்டேர். நீர்ப்பாசன குளங்கள் மூலம்  94,180 ஹெக்டேரில் வேளாண்மை விவசாயம் மற்றும் பயிர் செய்கைகள்   மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. சுமார் 476  ஹெக்டேர் பரப்பளவில் சிறுதானியம் செய்கை பண்ணப்படுகிறது.

சிறுபோகத்தில் 1525 MT  அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றது. 10 வகையான பழ மரக்கன்றுகள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றது.

தாயக மேம்பாடுஇங்கு 189 பாடசாலைகளில், 10 வகையான பழ மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது.  இப் பாடசாலைகள் மூலம் 14,690 பழ மர செய்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது.

மாவட்டத்தை பொறுத்தவரையில் 451 பாடசாலைகள் உள்ளது. சிங்களப் பாடசாலைகள் 189, தமிழ் பாடசாலை 93, முஸ்லிம் பாடசாலைகள் 169 ஆக உள்ளது.

பால் முட்டை இறைச்சி உற்பத்தியில் முன்னணியில் உள்ள மாவட்டம் அம்பாறை மாவட்டமாகும். சோளம், கௌபி, மிளகாய், குரக்கன் நிலக்கடலை உற்பத்தியிலும் இம்மாவட்டம் நல்ல நிலையில் உள்ளது.

Amparai 1 தாயக மேம்பாடு - அம்பாறை மாவட்டம் - தாஸ்வாழை, பப்பாசி, அன்னாசி, மா, தோடை அன்னமுன்னா, பூசணி மாதுளை தேசிக்காய், கொய்யா போன்றவையும் அயல் மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றது. மரக்கறி வகை பயிர்கள் அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டு ஏனைய மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றது.

இந்த உற்பத்தி அதிகமாக உள்ள போதும் அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ் முஸ்லிம் மக்கள் மிகவும் வறுமையில் எந்தவிதமான வளத்தையும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர். 15 வருடங்களாக வாழ்வாதார உதவிகள் இன்றி மிகவும் வறுமையில் வாழ்கின்றனர் வளம் அதிகம் இருந்தும் அதனை பயன்படுத்த முடியாத நிலையில் அம்மாவட்ட மக்கள் உள்ளனர் .

எனவே புலம்பெயர்ந்து வாழும் எம் மக்கள், நிறுவனங்கள் வாழ்வாதார உதவிகள் செய்ய முன்வர வேண்டும் என்பது அந்த மக்களின் எண்ணமாக விருப்பமாகவும் உள்ளது.

Tamil News