Home செய்திகள் வவுனியாவில் இளவயதினருக்கு எயிட்ஸ் நோய்- மருத்துவர் சந்திரகுமார்

வவுனியாவில் இளவயதினருக்கு எயிட்ஸ் நோய்- மருத்துவர் சந்திரகுமார்

வவுனியாவில் இளவயதினருக்கு எயிட்ஸ் நோய்

வவுனியாவில் இளவயதினருக்கு எயிட்ஸ் நோய்: வவுனியாவில் கடந்த சில ஆண்டுகளில் 29பேர் எயிட்ஸ் நோயாளிகளாக இனம்காணப்பட்டுள்ளதுடன் இளவயதினரே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு வேலைத்திட்டத்தின் பொறுப்பு வைத்திய அதிகாரி கு.சந்திரகுமார் தெரிவித்தார்.

எயிட்ஸ் நோய் தொடர்பாக இன்று ஊடகவியலாளர்களிற்கு கருத்து தெரிவித்த அவர்,

‘உலக எயிட்ஸ் தினம் மார்கழி மாதம் 1 ம் திகதி உலகம் முழுவதும் கடைப்பிடிக்கபட்டு வருகின்றது. இம்முறை சமத்துவமின்மையை ஒழிப்போம், எயிட்ஸ்சை ஒழிப்போம், பெருந்தொற்றை ஒழிப்போம் எனும் தொனிப்பொருளில் உலக எயிட்ஸ் தினம் அனுஸ்டிக்கபட இருக்கின்றது.

இலங்கையில் இதுவரை 4142 எயிட்ஸ் நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர். எந்தவித தொற்று அறிகுறிகள் இன்றி நோய்தொற்றுடன் 3700 பேர் நடமாடி வருகின்றார்கள். வவுனியா மாவட்டத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டிலிருந்து இந்த ஆண்டின் காலாண்டுவரை 29 எயிட்ஸ் நோயாளிகள் இனம் காணப்பட்டுள்ளனர்.

வவுனியாவைப் பொறுத்தவரை 15 வயது தொடக்கம் 35 வயதிற்குட்பட்டவர்களே தொற்றாளர்களாக இருக்கும் நிலை உள்ளது. இங்கு நோய்தொற்று ஏற்படுவதற்கு பிரதான காரணமாக பாலியல் தொழில் காணப்படுகின்றது. அத்துடன்  நோய்த்தொற்றுடன் சமூகத்தில் நடமாடி வரும்நிலையும் காணப்படுகின்றது” என்றார்.

Exit mobile version