வரலாறுகளை எழுதுபவர்கள் உண்மைகளைத் தேடிக் கண்டுபிடித்து எழுத வேண்டும்

வரலாறுகளை எழுதுபவர்கள் உண்மைகளைத் தேடி

உண்மைகளைத் தேடிக் கண்டுபிடித்து எழுத வேண்டும்

வரலாறுகளை எழுதுபவர்கள் உண்மைகளைத் தேடிக் கண்டுபிடித்து எழுத வேண்டும்

கேள்வி:
மாவீரர்களின் வித்துடல்களை ஆரம்பத்தில் எரியுட்டும் வழமை இருந்தது. பின்னர் புதைக்கும் நடைமுறை அமுலுக்கு வந்தது. அந்த நடைமுறையில் ஏதாவது சிக்கல்கள் இருந்ததா?

பதில்:
1982இலிருந்து 1991 யூன் முதல்பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுத் தான் இறுதி நடவடிக்கை நடந்தது. பின்னர் நாங்கள், கெரில்லாப் போராளிகளாக இருந்து, மரபுவழி இராணுவமாக மாற்றம் அடைந்ததுதான் எங்கள் வரலாறு. இவை அன்றைய காலப் பத்திரிகைகளிலும், அன்றைய காலத்தில் நாங்கள் வெளியிட்ட பிரசுரங்களிலும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வரலாற்றை திரித்து, புனைந்து வரலாறு எழுதுபவர்களும், பொய் வரலாறு எழுதுபவர்களும் இருக்கின்றார்கள்.

இந்திய இராணுவம் இருந்த நேரம் ஒரு போராளி கோண்டாவில் சந்தியில் வீரமரணம் அடைந்த போது, அவரின் வித்துடலை பெற்றோரிடம் ஒப்படைக்க முடியாத சூழ்நிலை இருந்தது. எனவே நீர்வேலியில் ஒரு பற்றைக்குள் எரித்துக் கொண்டிருக்கும் போது தான், எங்களுக்கு என்றொரு தனிச்சுடலை தேவை என்ற ஒரு சிந்தனை தோன்றியது. இந்திய இராணுவம் நின்ற காலகட்டத்தில் திக்குத் திக்காக ஒரு சில போராளிகள் நின்று போராடிய காலகட்டம். இந்தச் சிந்தனையின் அடிப்படையில் தான் இது நடைமுறைப்படுத்தி கோப்பாயில் திறந்தவெளிச் சிறைச்சாலை இருந்த அரச காணியில் எங்களுக்கு என்றொரு சுடலை கட்டுவதற்கு தீர்மானித்தோம். இதற்கு கமல் மாஸ்டர் என்பவர் தான். இவரின் திறமையைக் கண்டு இவரை நான் யாழ். வட்டப் பொறுப்பாளராக நியமித்தேன்.

தேடிக் கண்டுபிடித்து எழுத வேண்டும்1 வரலாறுகளை எழுதுபவர்கள் உண்மைகளைத் தேடிக் கண்டுபிடித்து எழுத வேண்டும்யாழ். மாவட்ட அரசியல் என்பது எங்கள் தலைவரின் இயக்க நிர்வாக ஒழுங்கின்படி, தளபதி ஒருவரைத் தேர்ந்தெடுப்பார்.  தேர்ந்தெடுத்தவரை,  எனது மாவட்டத்திற்கு அரசியல் வேலை செய்வதற்கு இவர்தான் பொருத்தமானவர் என்று தலைவருக்கு அறிமுகம் செய்து வைப்பார். இதன் அடிப்படையில்தான் யாழ். மாவட்ட அரசியல் என்பது நடந்து கொண்டிருந்தது. இந்திய இராணுவத்தின் பின்னர் இந்த ஒழுங்கில் தான் டொமினிக் அண்ணா, நான், இளம்பரிதி போன்றவர்களின் தெரிவு நடைபெற்றது. இந்த வேளையில்தான் நாங்கள் ஒரு சுடலையை கோப்பாயில் கட்டுகிறோம். அப்போது நாங்களும் சுடலை என்ற சொல்லையே பயன்படுத்தினோம்.

கமல் மாஸ்டர் எனது அலுவலகத்திற்கு ஒவ்வொரு நாளும் காலை வந்து என்னை சந்திப்பார். அப்போது ஒருநாள் சௌதியிலிருந்து ரவி என்ற கட்டடக்கலை நிபுணர் வந்திருப்பதாகவும், அவரை தான் சந்தித்ததாகவும் கூறினார். அப்போது நீர்வேலியில் போராளியை எரித்த போது, எமக்கென்று தனிச்சுடலை தேவை என்பது நினைவிற்கு வந்தது. உடனே நான் அவரை அழைத்து வரும்படி சொன்னேன். இவற்றை நீங்கள் ஊடகம் என்ற ரீதியில் ஆய்வு செய்து வரலாறாக்க வேண்டும். ஏனெனில், தினக்குரல் பத்திரிகையில் இராணுவ ஆய்வு எழுதுபவர் ஒருவர் நாங்கள் விறகு இல்லாமையினால் தான் புதைத்தோம் என எழுதியுள்ளார். 2009இற்குப் பின்னர் சமூகப் பொறுப்பில்லாமல், அறிவாளிகளும் சரி, ஆய்வாளர்கள் என்று சொல்பவர்களும் சரி, கருத்துக்களை அள்ளி வீசுகின்றார்கள். வரலாறை ஆராய்ந்து அவர்களையும் நேர்காணல் காணவேண்டும் என்பதற்காகவே தான் நான் அவர்களின் பெயர்களைக் கூறுகின்றேன்.

அந்தக் கட்டடக்கலை நிபுணரை நான் சந்தித்துக் கதைத்த போது, அவர் என்னிடம் கேட்டது எனக்கு நல்லதொரு பொறியியலாளரையும், நல்லதொரு மேசனையும் தாருங்கள் என்று தான்  கேட்டார். ரவி என்பவர் 3 படங்களைக் கொண்டு வந்தார். அதில் நாங்கள் ஒன்றைத் தெரிவு செய்தோம். அப்போது பொறியியலாளராக காந்தன் அண்ணா என்பவரையும், மேசன் வேலை சயெ்வதற்கு கொக்குவில் பொற்பதி வீதியில் உள்ளவர்களையும் தெரிவு செய்திருந்தோம். அவர்கள் தான் மாவீரர் மேடையை கட்டினார்கள். அந்தக் கட்டடம் கட்டுவதற்கு உதவி செய்தவர்கள் தற்போதும் இருக்கிறார்கள்.

அப்போதே தளபதி, அரசியல் பொறுப்பாளர்களுக்கு அதிகாரப் பரவலாக்கம் என்பதை தலைவர் திறம்படச் செய்து வைத்திருந்ததனாலேயே, நாங்கள் வேலைகளை இலகுவாகவும், எங்களின் தற்துணிவுடனும் எங்கள் சமூகத்திற்கும், எங்களின் விடுதலையின் வளர்ச்சிக்கும் செய்யக்கூடியதாக இருந்தது, இந்தச் சிந்தனையின் அடிப்படையில் நாங்கள் இதை உடனேயே அமுலாக்கினோம். மேடையைக் கட்டி, அந்த மேடையில் நீங்கள் எரிக்கின்ற போது சவால் வரும். வந்த சவால் என்னவென்றால், இவ்வளவு நாளும் எங்கள் ஊர்ச் சுடலையில் எரித்த போராளிகளை ஏன் கோப்பாயில் கொண்டுபோய் எரிக்க வேண்டும். பெற்றோர்கள், ஊரவர்கள் எல்லோரும் முரண்பட்டார்கள். அந்த நேரம் அவர்களுக்கு ஓர் விளக்கத்தை நாங்கள் கொடுத்தோம்.  எங்களுடைய போராளிகள் இனிமேல் ஊர்ச் சுடலைகளில் எரிவதில்லை. இவர்கள் சமூகத்திலிருந்து வித்தியாசமானவர்களாக வாழ்கிறார்கள்.

தேடிக் கண்டுபிடித்து எழுத வேண்டும்2 வரலாறுகளை எழுதுபவர்கள் உண்மைகளைத் தேடிக் கண்டுபிடித்து எழுத வேண்டும்எனவே இவர்களுக்கென்று ஒரு தனிச் சுடலை அமைத்துள்ளோம் என்று அவர்களுக்கு ஓர் விளக்கத்தை நான் கொடுக்கிறேன். எனது மனதில் தோன்றிய எண்ணங்களை அந்தப் பெற்றோரிடம் எடுத்துச் சொல்லி, கெஞ்சி, அவர்களைத் திருப்திப்படுத்தி, கொண்டுவந்து அந்த மேடையில் வைத்து எரிக்கிறோம். இதை நானும் பானு அண்ணாவும் தேசியத் தலைவரிடம் கொண்டுபோய்க் காட்டும் போது, தலைவர் சொன்னார், இது நல்ல வேலை. ஆனால் இந்த மேடையில் அஞ்சலி நிகழ்வை செய்துவிட்டு, புதைக்கும்படி சொன்னார்.

இதையடுத்து அடுத்த உடலை நாங்கள் புதைக்க ஆயத்தமானோம். அளவெட்டியிலிருந்து வந்த சோலை என்ற போராளியின் உடலபை் புதைக்கும் போது, அவர் சைவ சமயத்தைச் சேர்ந்தவர். அவரைப் புதைக்க முடியாது என்பது அந்தச் சவாலாக இருந்தது. அவர்களுக்கும் நாங்கள் ஒரு விளக்கத்தைக் கொடுக்கின்றோம். புதைக்கும் போது மாதம் மாதம் நீங்கள் வந்து பார்க்கலாம். நீங்கள் வீட்டிலும் அஞ்சலி செய்யலாம் என்று விளக்கம் கொடுக்கின்றோம். அந்த நேரம் எனது மனதில் ஏற்படும் கருத்தும்,சிந்தனையுமே பதிலாக இருந்தது. இதுதான் எங்களின் அரசியல் பணி.

மக்களுடைய பிரச்சினைகளுக்கும் பதிலளித்து, எங்களின் கொள்கைகளையும் அவர்களுக்குத் தெரியப்படுத்தி, இவ்வளவு பிரச்சினைகளையும் தாண்டித்தான் முதலாவது மாவீரரரை நாங்கள் அந்த மண்ணில் விதைக்கிறோம். நான் கூறியது போல, இந்தப் போராளியின் 31ஆம் நாள் அன்று கோப்பாய் துயிலும் இல்லத்தில் இன்னொரு போராளியை புதைப்பதற்காகக் கொண்டு செல்லும் போது, இதே போராளியின் பெற்றோர் பொங்கல் வைத்து எங்களுக்கும் தந்து. “தம்பி நீ சொன்னது இப்பதான் எங்களுக்கு விளங்குது” என்று சொல்லிய வரலாறும் உள்ளது. இவற்றையெல்லாம் நாங்கள் நேரே அனுபவித்தோம். இப்படியாக நேரே அனுபவித்த குடும்பங்கள் இப்போதும் இருக்கிறார்கள். அவர்களை நீங்கள் அணுகிக் கேட்டால், அவர்களே சொல்லுவார்கள்.

ஆகவே இவ்வாறான நிகழ்வுகளை, நாங்கள் எழுந்தமானமாகவோ, விறகுத் தட்டுப்பாட்டால் இப்படி செய்கிறோம் என்று வரலாற்றாசிரியர்கள் எழுதும் போது, குறிக்கப்பட்டோர் அவரை நம்பத்தான் செய்வார்கள். ஆனால் வரலாறு என்று வரும் போது, இந்நிகழ்வுகளுடன் சம்பந்தப்பட்டவர்கள் உயிருடன் இருக்கும் போது அவர்களை அணுகுவதும், அவர்களை அணுகி தகவல்களைப் பெறுவதும் அல்லது அந்தக் காலத்தில் வெளிவந்த பத்திரிகைகளை தேடிப் பார்ப்பதும் தான் சாலச்சிறந்தது என்பதை நான் இந்த நேரத்தில் கூறிக்கொள்ள வேண்டிய ஒரு கருத்து. இவர்களை நாங்கள் எழுத வேண்டாம் என்று சொல்லவும் கூடாது. சொல்லவும் முடியாது. எனவே அவர்கள் உண்மைகளைத் தேடிக் கண்டுபிடித்து எழுத வேண்டும்.

காலத்தின் குரலாக பேசும் புதுவை இரத்தினதுரை.! | EelamViewஆய்வாளர்கள் சம்பந்தப்பட்டவர்கள் உயிருடன் இருக்கும் போதே தெரிந்து கொண்டே சிலர் பொய்யை எழுதுகின்ற ஒரு வரலாறும் இருக்கின்றது. அப்படி எழுதியவர்களிடம் ஏன் அப்படி எழுதினீர்கள் என நான் நேராகவும் கேட்டேன். மறுநாள் என்னிடம் மன்னிப்புக் கேட்டார். நாங்கள் உயிருடன் இருக்கும் போது இவற்றை நாங்கள் கேட்கத்தான் செய்வோம். உண்மையான கருத்துக்களை நாங்கள் ஆதாரபூர்வமாக சொல்லவும்தான் செய்வோம். ஆகவே இதையிட்டு ஒருவரும் மனவேதனைப்படவும் தேவையில்லை. அன்றைய காலத்தில் தாக்கிறது என்பதே வழக்கத்தில் இருந்த சொல்லாகும். புதைகுழி, புதைப்பது என்பது போன்ற சொற்களுக்கெல்லாம் சொந்தக்காரன் புதுவை இரத்தினதுரை அவர்களே. அந்த வரலாறு உருவான கதையை நான் பின்னர் சொல்கிறேன்.

யாழ். மாவட்டத்தில் வட்டப் பொறுப்பாளர் என்பது 15 வட்டத்திற்கும் ஒவ்வொரு பொறுப்பாளர், தீவகம், வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம் ஆகியவற்றிற்கும் 4 பொறுப்பாளர்கள். 435 கிராம சேவகர் பிரிவுகளிலும் பிரதேசப் பொறுப்பாளர்கள் இருந்தார்கள். இந்த ரீதியில் தான் நிர்வாகக் கட்டமைப்பு இருந்தது.

எனவே இனிமேல் எழுதும் போது சிந்தித்து, தியாகிகளின் வரலாறுகளையும், மாபெரும் இயக்கத்தின் வரலாறையும் எழுத வேண்டும் என்றே அவர்களிடம் நான் இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறுதான் இந்தப் புதைகுழி, துயிலும் இல்லம் உருவான வரலாறு, சவால்களை நாங்கள் சந்தித்தோம். இந்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தந்த ILC வானொலிக்கு நன்றி.

தொடரும்..

ilakku Weekly Epaper 158 November 28 2021 Ad வரலாறுகளை எழுதுபவர்கள் உண்மைகளைத் தேடிக் கண்டுபிடித்து எழுத வேண்டும்