Home செய்திகள் நேபாளத்தில் கனமழை: வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 43 பேர் பலி

நேபாளத்தில் கனமழை: வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 43 பேர் பலி

நேபாளத்தில் கனமழை


நேபாளத்தில்  பெய்து வரும் கன மழை காரணமாக இது வரையில் 43பேர் உயிரிழந்துள்ளதுடன்  மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நேபாளத்தின் கிழக்கு மலை பிரதேசங்களில் கனமழை  பெய்து  வருகிறது. இந்த தொடர் கனமழையால் அங்கு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியதனால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர்.

நேபாளத்தில் கனமழை காரணமாக வெள்ளத்தில் சிக்கி பாலங்கள் மற்றும் சாலைகளும் அடித்து செல்லப்பட்டுள்ளன. பல இலட்சம் ஏக்கர் பரப்பளவிலான விவாசய பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இதனிடையே கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக கிழக்கு மலை பிரதேசங்களில் பல இடங்கில் நிலச்சரிவு  ஏற்பட்டதில் அதிகமான வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்தன.

இதற்கிடையே கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 43 பேர் உயிரிழந்துள்ளதாக   தகவல்கள் தெரிவிக்கின்றன. அதோடு 30-க்கும் அதிகமானோர்  காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Exit mobile version