Home உலகச் செய்திகள் சென்னையில் கன மழை- பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின

சென்னையில் கன மழை- பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின

பல பகுதிகள் வெள்ளத்தில்

சென்னையில் வழக்கத்துக்கு மாறாக கனமழை பெய்து வருவதால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக வடகடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதன் காரணமாக, கடந்த சனிக்கிழமை இரவு முழுக்க கனமழை பெய்தது.

பல பகுதிகளில் 10 செ.மீட்டருக்கு மேல் மழை பெய்ததால் நகரின் பெரும்பாலான பகுதிகள் நீரில் மூழ்கின. `வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் வரும் 9 முதல் 11 ஆம் திகதி வரையில் கனமழை பெய்யலாம்’ எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், கனமழை தொடர்பாக வானிலை ஆய்வு மையம் முன்னெச்சரிக்கை அறிவிப்பு எதையும் கொடுக்காத சூழலில், அதீத கனமழை பெய்தது தொடர்பாக வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறுகையில், ` காற்றின் போக்கை கணிக்கும்போது செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு இருந்தது. ஆனால், 6ஆம் திகதி நள்ளிரவு மிகக் குறுகிய காலத்தில்  அதிக  மழை  பதிவாகியுள்ளது.

இதனை `மீசோஸ்கேல் ஃபினோமினா’ (mesoscale phenomena) என்பார்கள். அந்தவகையில் இம்மாதிரியான மழையை முன்கூட்டியே கணிக்க முடியாது என்றார்.

Exit mobile version