யாழ் மாநகரசபை கலைக்கவேண்டிவரும் என கூறவில்லை – வடக்கு மாகாண ஆளுநர்

ஆரிய குளத்தில் இராணுவத்தினர் வெசாக் கூடு அமைப்பதற்கு அனுமதி கொடுக்கா விட்டால் யாழ் மாநகரசபை கலைக்க வேண்டிவரும் என எந்த சந்தர்ப்பத்திலும் கூறவில்லை என வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார்.

இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட வடக்கு ஆளுநர் இடம் அருகே உள்ள விடயம் தொடர்பில் ஊடகவியலாளர் வினவிய போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

யாழ் மாநகர சபை விடயம் தொடர்பில் நான் தற்போது பேச விரும்பவில்லை. எனினும் நான் மாநகர சபையை கலைப்பதாக யாரிடமும் கூறவில்லை எனவே அந்த விடயம் தொடர்பில் நான் பேச வேண்டிய தேவை இல்லை எனவும் தெரிவித்தார்.

இதேவேளை, சிங்கள பௌத்த மக்கள் கொண்டாடும் வெசாக் முழு நிலவு நாளை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் உள்ள ஆரியகுளம் மகிழ்வூட்டும் திடல் பகுதியில் வெசாக் கூடு அமைப்பதற்கு முற்பட்டபோது யாழ். மாநகர சபை அதற்கு அனுமதி மறுத்திருந்தது.

இதையடுத்து ஆரிய குளத்தில் இராணுவத்தினர் வெசாக் கூடு அமைப்பதற்கு அனுமதி கொடுக்காவிட்டால் யாழ் மாநகரசபை கலைக்கவேண்டிவரும் வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்திருந்ததாக செய்திகள் வெளிவந்து சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tamil News