Tamil News
Home செய்திகள் போரை முடிவுக்குக் கொண்டுவர ஹமாஸ் தயார்

போரை முடிவுக்குக் கொண்டுவர ஹமாஸ் தயார்

பாலஸ்தீன போராளிக் குழுவான ஹமாஸ், காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேலுடன் ஒரு ஒப்பந்தத்திற்குத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளதாக அசோசியேட் டட் பிரஸ் (ஏபி) புதன்கிழமை(2) செய்தி வெளியிட்டுள்ளது.
“போரை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவருவதற்குத் தெளிவாக வழிவகுக்கும் எந்தவொரு முயற்சியையும் ஹமாஸ் ஏற்கத் தயாராக உள்ளது” என்று ஹமாஸ் அதிகாரி தாஹர் அல்நுனு கூறி யதாக மேற்கோள் காட்டப்பட் டுள்ளது. இருப்பினும்,வாஷிங்டன் முன்மொழியப்பட்ட 60 நாள் போர்நிறுத்தத் திட் டத்தை அது அங்கீகரிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
அமெரிக்க ஆதரவு திட்டத்தை நிராகரிப்பது ஹமாஸின் நிலைப்பாட்டை மோசமாக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்ததைத் தொடர்ந்து இந்த அறிக்கை வெளிடப்பட்டுள்ளது. 60 நாள் போர் நிறுத்தத்தை இறுதி செய்வதற்குத் தேவையான விதிமுறைகளுக்கு இஸ்ரேல் “ஒப்புக் கொண்டுள் ளது” என்று செவ்வாயன்று(1) ட்ரம்ப் தனது ட்ரூத் சமூகவலைத் தளத்தில் கூறினார், இதன் போது போரை முடிவுக்குக் கொண்டுவர அனைத்து தரப்பினரும் பாடுபடும்.
இந்தத் திட்டத்தில் காசாவிலிருந்து இஸ்ரேல் தனது படையினரை பகுதியளவு திரும் பப் பெறுதல், மனிதாபிமான உதவிகளின் அதிகரிப்பு மற்றும் மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்ட மத்தியஸ்த பேச்சுவார்த்தைகள் ஆகியவை அடங்கும் என்று இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் ஏபியிடம் தெரி வித்தார். இருப்பினும், தற்போதைய திட்டத்தின் ஒரு பகுதியாக மோதல்களை முழுமையாக நிறுத்துவதற்கு இஸ்ரேல் முறையாக உறுதியளிக்க வில்லை என்று அந்த அதிகாரி கூறினார்.
ஹமாஸ் பிரதிநிதிகள் குழு கெய்ரோவில் எகிப்திய மற்றும் கத்தார் மத்தியஸ்தர்களைச் சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மீதமுள்ள 50 பணயக்கைதிகளை விடுவிக்கத் தயாராக இருப்பதாக போராளிக் குழு தெரிவித்துள்ளது – அவர்களில் பாதிக்கும் குறைவானவர்கள் உயிருடன் இருப்பதாக நம்பப்படு கிறது அதற்கு மாற்றீடாக இஸ்ரேல் தனது படையினரை முழுமையான திரும்பப் பெறுதல் மற்றும் போருக்கு நிரந்தர முடிவு ஏற்படுத்தப்பட வேண்டும் என ஹமாஸ் தெரிவித்துள்ளது. ஆனால். இஸ்ரேல் அந்த நிபந்தனைகளை நிராகரித்துள்ளது.
வருங்காலத்தில் “ஹமாஸ் இருக்காது” என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன் யாகு புதன்கிழமை ஒரு உரையில் கூறினார். ஹமாஸ் ஏற்க மறுக்கும் நிபந்தனைகளுக்கு ஏற்ப, குழு சரணடைய வேண்டும், நிராயுதபாணியாக்க வேண்டும் மற்றும் காசாவை விட்டு வெளியேற வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
22 மாதங்களாக நடைபெற்று வரும் போர், காசாவை பேரழிவிற்கு உட்படுத்தியுள்ளது. இதுவரையில் அங்கு 57,000 இற்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டதுடன், 130,000 ஈற்கு மேற் பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
Exit mobile version