Notice: Undefined variable: _SESSION in /home/gi5h742vtw17/public_html/www.ilakku.org/index.php on line 1
ஹைட்டி அதிபர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு | October 1, 2023
Home உலகச் செய்திகள் ஹைட்டி அதிபர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு

ஹைட்டி அதிபர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு

8f03e2121a6388db970b3f6984ac4ca6c8b4badc ஹைட்டி அதிபர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு

கரீபிய நாடான ஹைட்டி(Haiti) அதிபர் ஜோவானெல் மோசே அவர் தங்கி இருந்த வீட்டின் ​மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் ஒன்றில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்நாட்டின் இடைக்காலப் பிரமர் கிளாடி ஜோசப்  அறிக்கை ஒன்றை வௌியிட்டு இந்த தகவலைத் தெரிவித்துள்ளார்.

அதிபர் ஜோவானெல் மோசே ஆயுதக் குழு ஒன்றால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தாக்குதலின் போது அதிபரின் மனைவி காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

53 வயதான மோசே 2017-ஆம் ஆணஅடு பிப்ரவரி முதல் ஹைதியின் அதிபராகப் பதவி வகித்து வருகிறார். முந்தைய அதிபர் மார்ட்டெல்லி பதவி விலகியதைத் தொடர்ந்து அவருக்கு இந்த வாய்ப்புக் கிடைத்தது.

அவரது பதவிக் காலத்தில் அவரது அரசு மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அவர் பதவி விலகக் கோரி வன்முறைப் போராட்டங்கள் நடந்தன.

இந்த ஆண்டின் தொடக்கத்திலும் மோசே பதவி விலக வேண்டும் என்று கோரி தலைநகரிலும் நாட்டின் பல்வேறு நகரங்களிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

கடந்த பிப்ரவரி மாதத்துடன் மோசேவின் பதவிக் காலம் முடிந்துவிட்டதாக எதிர்கட்சிகள் கூறுகின்றன. ஆனால் தாம் தாமதமாகவே பதவியேற்றுக் கொண்டதால் மேலும் ஓராண்டு காலம் பதவியில் நீடித்திருக்கப் போவதாக மோசே அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலக்கு இந்த வார மின்னிதழ் 137

NO COMMENTS

Leave a Reply

Exit mobile version