Home செய்திகள் மனிதவுரிமை செயற்பாட்டாளர் ராஜி பீட்டர்சன் மீது துப்பாக்கிப் பிரயோகம்

மனிதவுரிமை செயற்பாட்டாளர் ராஜி பீட்டர்சன் மீது துப்பாக்கிப் பிரயோகம்

ராஜி பீட்டர்சன் மீது துப்பாக்கிப் பிரயோகம்

ராஜி பீட்டர்சன் மீது துப்பாக்கிப் பிரயோகம்

அமெரிக்காவில் குடும்பத்துடன் காரில் பயணம் செய்து கொண்டிருந்த பிரபல மனிதவுரிமை செயற்பாட்டாளரும், உலகளாவிய ரீதியில் பெண்களின் உரிமை மேம்பாடு தொடர்பில் ஐ.நா. சபையின் கிளை நிறுவனங்களோடு இணைந்து செயற்பட்டு வருபவருமான  திருமதி ராஜி பீட்டர்சன் என்ற ஈழத்தமிழ் பெண்  மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் அவர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

திருமதி ராஜி பீட்டர்சன் ஈழத்தமிழர் மனித உரிமை செயற்பாடுகளில் ஈடுபட்டு வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Top 20 women of Excellence என்ற விருதைப் பெறுவதற்காக சிக்காகோ நகருக்கு குடும்பத்துடன் பயணம் செய்து கொண்டிருந்தபோதே இந்தத் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இனந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில்  வாகனத்தின் சாளரங்கள் சேதமாக்கப்பட்டதுடன்,  அவரின் காதருகில் காயமேற்பட்டு ள்ளதாகவும், “தமிழ்முரசம்” வானொலிக்கு வழங்கிய பிரத்தியேக சந்திப்பில் திருமதி. ராஜி பீட்டர்சன்  தெரிவித்துள்ளார்.

மிகுந்த வாகன நெரிசலுடைய நெடுஞ்சாலையில் வைத்து நிகழ்ந்த மேற்படி சம்பவத்தின்போது, சமயோசிதமாக செயற்பட்ட திருமதி. ராஜியின் துணைவர்  சமயோசிதமாக வாகனத்தை செலுத்தி மேலதிக அசம்பாவிதங்களேதும் ஏற்படாமல் செயற்பட்டிருந்தார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த அமெரிக்க காவல்துறையினர், தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்ததாகவும் திருமதி. ராஜி   மேலும் தெரிவித்துள்ளார்.

நன்றி “தமிழ்முரசம்”

Exit mobile version