Home உலகச் செய்திகள் Project Invigor: கிரீஸில் சர்வதேச ஆட்கடத்தல் வலைப்பின்னலைச் சேர்ந்தவர்கள் கைது

Project Invigor: கிரீஸில் சர்வதேச ஆட்கடத்தல் வலைப்பின்னலைச் சேர்ந்தவர்கள் கைது

Greece boat 2 Project Invigor: கிரீஸில் சர்வதேச ஆட்கடத்தல் வலைப்பின்னலைச் சேர்ந்தவர்கள் கைது

குடிவரவுக் குற்றங்களை தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் மூலம், கிரீஸில் சர்வதேச ஆட்கடத்தல் வலைப் பின்னலைச் சேர்ந்த 8 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.

திட்டமிடப்பட்ட குடிவரவுக் குற்றங்களை தடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ஐக்கிய இராச்சியத்தின் தேசிய குற்ற முகமை தலைமையிலான பணிக்குழுவைச் சேர்ந்த அதிகாரிகளும் இந்த நடவடிக்கையில் பங்கேற்று இருக்கின்றனர்.

கிரீஸின் Lefkada தீவிலிருந்து இத்தாலிக்கு 14 குடியேறிகளுடன் சென்ற அதிவேக படகு இடை மறிக்கப்பட்ட நடவடிக்கையின் போது, குடியேறிகளை விட்டுவிட்டு தப்ப முயன்ற படகு ஓட்டி கைது செய்யப் பட்டுள்ளார். அதைத் தொடர்ந்து கிரீஸ் தலைநகர் ஏதென்ஸில் பல இடங்களில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையில், 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Exit mobile version