பொருளாதார நெருக்கடி காரணமாக பண்ணையாளர்கள் பெரும் பாதிப்பு

பண்ணையாளர்கள் பெரும் பாதிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் பொருளாதார நெருக்கடி காரணமாக பண்ணையாளர்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

இலங்கையில் பால்மாவுக்கான விலைகள் அதிகரித்துள்ளபோதிலும் தமக்கான பாலின் விலைகள் அதிகரிக்கப்படாத காரணத்தினால் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்குவதாக மட்டக்களப்பு மாவட்ட பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பொருளாதார நெருக்கடி காரணமாக எரிபொருள் மற்றும் ஏனைய பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் பண்ணையாளர்கள் அதிக செலவுகளை எதிர்கொள்ள நேரிடுகின்றது.

வெளிநாட்டு பால்மாவுக்கான விலைகள் கடுமையாக அதிகரித்துள்ளபோதிலும் தமக்கான விலைகளை மில்கோ பால் கூட்டுத்தாபனம் அதிகரிக்கவில்லையெனவும் பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பில் நாளாந்தம் சுமார் 60ஆயிரம் லீற்றருக்கும் அதிகமான பால் மில்கோ பால் கூட்டுத்தாபனத்திற்கு வழங்கப்படுகின்ற நிலையிலும் இந்த நிலைமையினை தாங்கள் எதிர்கொள்வதாக பண்ணையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

ஏனைய மாவட்டங்களில் உள்ள பண்ணையாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றபோதிலும் தமக்கு எந்தவிதமான சலுகைகளும் வழங்கப்படாத நிலையே காணப்படுவதாகவும் மட்டக்களப்பு மாவட்ட பண்ணையாளர்கள் தெரிவிக்கினறனர்.

Tamil News