நாட்டு மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியாத நிலையில் அரசு! யாழ்ப்பாணத்தில் சஜித் தெரிவிப்பு

மக்களின் பிரச்சினைகளை தீர்க்க
நாட்டு மக்களின் பிரச்சினைகளை தீர்க்ககளுக்கு தீர்வு வழங்க முடியாத நிலையில் இந்த அரசாங்கம் காணப்படுகிறது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார் நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் திருநகரில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றியபோது கூறினார்.

தற்போதுள்ள அரசாங்கம் நாட்டு மக்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு வழங்க முடியாத நிலையில் காணப்படுகிறது. குறிப்பாக அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் பால்மா எரிவாயு தட்டுப் பாடு போன்றவற்றை நிவர்த்தி செய்வதற்கு இந்த அர சாங்கத்தால் எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட வில்லை.

இந்த அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களாக உள்ளவர்கள் சீனாவால் வழங்கப்பட்ட மாளிகைக்குள் இருந்து கொண்டு ஒவ்வொரு கதைகளை கூறிக் கொண்டிருக் கிறார்கள். ஆனால், அவர்கள் மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு வழங்குவதற்கு எந்தொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சி மலரும்போது குறிப்பாக வட, கிழக்கில் உள்ள மக்களின் குறை நிறைகள் தீர்த்து வைக்கப்படும்.

அவர்களின் அடிப்படை வசதி களும் கூட பூர்த்தி செய்யப்படக் கூடிய நிலைவரும் எனினும் நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு நாங்கள் பல்வேறுபட்ட வேலைத்திட்டங்களை முன் னெடுத்து வருகின்றோம் குறிப்பாக கிராமப்புற வைத்திய சாலைகளுக்கு உதவி மற்றும் பின்தங்கிய இடங்களில் உள்ள பாடசாலைகளுக்கு அதாவதுகிராம மட்ட பாடசாலைகளுக்கான நவீனரக கணனி உபகர ணங்கள், தொழில்நுட்ப சாதனங்கள் வழங்கும் திட்டங்களை முன்னெடுத் துள்ளோம்.

நாங்கள் அரசாங்கத்தின் நிதியில் செய்யவில்லை. எம்மால் எமது முயற்சி யால் இந்த உதவிகளை மேற்கொண்டு வருகின் றோம். ஆனால் நமது ஐக்கிய மக்கள் சக்தி அரசு ஆட்சிக்கு வருமாக இருந் தால் இதே போன்று பன் மடங்கு சேவையை மக் களுக்கு வழங்க முடியும்” என்றார்.

Tamil News