புலம்பெயர் தமிழருடன் இணக்கத்துக்கு அரசு வந்தால் அதற்கு ஆதரவளிப்போம்; லக்‌ஷ்மன் கிரியெல்ல

புலம்பெயர் தமிழருடன் இணக்கத்துக்கு அரசு
“பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை மாற்றினால் மாத்திரம் போதாது. 20 ஆவது திருத்தத்தை மீள மாற்ற வேண்டும். ஐரோப்பிய ஒன்றியக் குழுவினர் இங்கு அதிகாரப் பகிர்வு இல்லை என்பதனை சுட்டிக்காட்டியுள்ளனர். 17 ஆவது திருத்தத்தை கொண்டு வந்தவரே 18 க்கு ஆதரவளித்து பின்னர் 20 ஆவது திருத்தத்திற்கும் ஆதரவளித்துள்ளார். இவ்வாறான சந்தர்ப்பவாதிகளால் சர்வதேசத்தை வெற்றிக்கொள்ள முடியாது” என்று தெரிவித்த என்று எதிர்க்கட்சி பிரதம கொறடாவான பாராளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியெல்ல, புலம்பெயர் தமிழர்களுடன் பேசுவதற்கு தயார் என்று ஜனாதிபதி கூறியுள்ளமையை வரவேற்பதுடன், அதன்மூலம் புலம்பெயர் தமிழருடன் இணக்கத்துக்கு அரசு வருமாக இருந்தால் அதற்கு நாங்கள் ஆதரவளிப்போம் என்றும் கூறினார்.

எனினும் சர்வதேச சமூகத்தை வெற்றிக்கொள்ள வேண்டுமானால் அரசாங்கம் சிலவற்றை நிறைவேற்ற வேண்டியது அவசியமானது என்றும், அதன்படி மனித உரிமைகள், ஜனநாயகம், ஊடக சுதந்திரம், தொழிற்சங்க உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கையெடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பெறுமதி சேர் வரி திருத்தச்சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

“ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகாரிகளை நாங்கள் சந்தித்தோம். அவர்கள் இலங்கைக்கு வருவதற்கு முன்னர் இலங்கையின் கடந்த 2 வருட கால நிலைமை தொடர்பான புரிந்துணர்வுடனேயே வந்துள்ளனர். மனித உரிமை மீறல்கள், மக்கள் அடிப்படை உரிமை கட்டுப்பாடுகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக அறிந்துள்ளனர்.

எனினும் அந்த சந்திப்பின் போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, என்ன பிரச்சனை இருந்தாலும் ஜீ.எஸ்.பி சலுகையை நிறுத்த வேண்டாம் என்று கூறினார். இவ்வாறு கூறும் போது அந்தக் குழுவின் தலைவர் தெரிவிக்கையில், நாங்கள் ஆரம்பத்தில் இருந்து அவதானம் செலுத்தி வருகின்றோம். 2015 ஆரம்ப காலத்தில் நல்லாட்சி அரசாங்கத்தினால் முன்வைத்த விடயங்கள் தொடர்பில் ஆச்சரியமடைந்தோம் என்றார்.

குறிப்பாக நல்லிணக்கம், சிறுபான்மையினர் தொடர்பில் அவதானம் செலுத்தல், 19 ஆவது திருத்தம் ஆகியன தொடர்பில் கூறினர். 19 ஆவது திருத்தத்தை தற்போது மாற்றுவது தொடர்பிலும் கூறியுள்ளனர். இந்த விடயத்தில் இருந்து நாங்கள் படிக்க வேண்டிய விடயங்கள் உள்ளன. ஐரோப்பிய ஒன்றிய குழு இலங்கையில் இருக்கையிலேயே, ஊடகவியலாளர்களை சி. ஐ.டி.க்கு அழைத்துள்ளனர். இவர்கள் இந்த அரசாங்கத்தை கொண்டு வர பங்களித்தவர்கள். வெள்ளைப்பூண்டு மோசடி தொடர்பில் எழுதியமைக்காக இவர்கள் சி. ஐ.டி.க்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை குற்றமிழைக்கவில்லை என்று யார் கூற வேண்டும்? நாங்கள் கூறியோ, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரீஸ் கூறுவதிலோ பலனில்லை. சர்வதேச சமூகம் இதனை கூற வேண்டும். ஆனால் அப்படி நடக்கவில்லை. மனித உரிமைகள் பேரவையில் தோல்வியடைந்துள்ளோம். ஜீ.எஸ்.பிக்கு என்ன நடக்குமோ தெரியவில்லை. அவர்கள் சுயாதீன தீர்மானத்தை அறிவிப்பர்.

இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியக் குழு நாட்டில் அனைத்தையும் அறிந்தே வந்துள்ளனர். பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை மாற்றினால் மாத்திரம் போதாது. 20 ஆவது திருத்தத்தை மீள மாற்ற வேண்டும். ஐரோப்பிய ஒன்றியக் குழுவினர் இங்கு அதிகாரப் பகிர்வு இல்லை என்பதனை சுட்டிக்காட்டியுள்ளனர்.

17 ஆவது திருத்தத்தை கொண்டு வந்தவரே 18 க்கு ஆதரவளித்து பின்னர் 20 ஆவது திருத்தத்திற்கும் ஆதரவளித்துள்ளார். இவ்வாறான சந்தர்ப்பவாதிகளால் சர்வதேசத்தை வெற்றிக்கொள்ள முடியாது. தற்போது ஜனாதிபதி தமிழ் புலம்பெயர் அமைப்புகளுடன் பேசுவதற்கு தயார் என்று கூறியுள்ளார். இதனை வரவேற்கின்றோம். அவருக்கு அவர்களுடன் ஏதேனும் இணக்கப்பாட்டுக்கு வரமுடியுமாக இருக்குமாக இருந்தால் அதற்கு நாங்கள் ஆதரவளிப்போம். ஆனால் சர்வதேச சமூகத்தை வெற்றிக்கொள்ள வேண்டுமாயின் எமது நாட்டில் மனித உரிமைகள், ஜனநாயகம், ஊடக சுதந்திரம், தொழிற்சங்க உரிமைகளை பாதுகாப்பது அவசியம் என்றார்.

இந்தியா மூலம் அனைத்துலக விசாரணையைத் தடுக்க முயலும் சிறிலங்கா தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் விழிப்புடன் செயற்பட வேண்டிய நேரம் – சூ.யோ. பற்றிமாகரன் –

ilakku-weekly-epaper-150-october-03-2021