அன்னை பூபதி அவர்களின் உண்ணாவிரதம் 19.03.1988 அன்று தொடங்கியது Tamil News
Home செய்திகள் சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்தை சென்றடைந்தார் கோட்டாபய

சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்தை சென்றடைந்தார் கோட்டாபய

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தாய்லாந்தை சென்றடைந்துள்ளார்.

அந்நாட்டு நேரப்படி (11) இரவு 8 மணிக்கு பேங்கொக் நகரிலுள்ள மியங் விமான நிலையத்தை அவர் சென்றடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வேறொரு நாட்டில் நிரந்தர புகலிடம் பெற்றுக்கொள்ளும் வரை   தற்காலிகமாக தாய்லாந்தில் தங்கியிருப்பார் என தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஒச்சா தெரிவிக்கின்றார்.

கோட்டாபய ராஜபக்ஸவுக்கு சிங்கப்பூரில் தங்கியிருப்பதற்கு 14 நாட்கள் விசா வழங்கப்பட்டதுடன் பின்னர் அது மேலும்  14 நாட்களுக்கு  நீடிக்கப்பட்டது.

இதற்கமைய வீசா காலம் இன்றுடன் நிறைவடைகின்றது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தொடர்பான விடயம்  மனிதாபிமான பிரச்சினை என்பதால் அவருக்கு தற்காலிகமாக தாய்லாந்தில் தங்க அனுமதியளிக்கப்பட்டதாக தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஓச்சா தெரிவித்துள்ளார்.

மனிதாபிமான அடிப்படையில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் இது தற்காலிகமானது எனவும் தாய்லாந்து பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version