Home செய்திகள் அகதிகளுக்கு நிரந்தர விசாக்களை கொடுங்கள்: அவுஸ்திரேலியாவில் போராட்டம் 

அகதிகளுக்கு நிரந்தர விசாக்களை கொடுங்கள்: அவுஸ்திரேலியாவில் போராட்டம் 

Australia Protest அகதிகளுக்கு நிரந்தர விசாக்களை கொடுங்கள்: அவுஸ்திரேலியாவில் போராட்டம் 

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் கூடிய நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் தற்காலிக விசாக்களில் உள்ள அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்களுக்கு நிரந்தர விசாக்களை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

“அகதிகளுக்கு விடுதலை”, “அனைவருக்கும் நிரந்தர விசாக்களை வழங்குக”, “அகதிகள் குடும்பத்தினரை மீண்டும் இணையுங்கள்” உள்ளிட்ட கோரிக்கை பதாகைகளை போராட்டக்காரர்கள் கையில் ஏந்தியிருந்தனர்.

தற்போதைய நிலையில், அவுஸ்திரேலியாவில் 19 ஆயிரம் பேர் தற்காலிக பாதுகாப்பு விசாக்கள் அல்லது Save Haven Enterprise விசாக்களில்உள்ளனர் எனக் கூறுகிறார் அகதிகள் செயல்பாட்டாளரான பேச்சாளர் ஐன் ரிண்டோல்.

அத்துடன் மேலும் 10 ஆயிரம் பேர் விசா மறுக்கப்பட்டு மற்றும் ஆபத்தான இணைப்பு விசாக்களில் வாழ்ந்து வருகின்றனர் என அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

“தேர்தல் அன்று இரவு தற்போதைய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் தொழிற்கட்சி ஆட்சியின் கீழ் யாரும் கைவிடப்பட்ட மாட்டார்கள் என்றார். ஆனால் தற்காலிக விசாக்களில் உள்ளவர்கள் மட்டும் அல்ல, அகதிகளும் தஞ்சக்கோரிக்கையாளர்களும் கைவிடப்பட்டு இருக்கின்றனர்,” எனத் தெரிவித்திருக்கிறார் ஐன் ரிண்டோல்.

“இன்னும் 200 அகதிகளும் தஞ்சக்கோரிக்கையாளர்களும் நவுரு மற்றும் பப்பு நியூ கினியா தீவில் உள்ளனர். இந்தோனேசியாவில் உள்ள ஐ.நா.வின் பதிவின் கீழ் இருக்கும் அகதிகளை ஏற்றுக் கொள்வதற்கு விதிக்கப்பட்ட முந்தைய ஆட்சியின் தடை இப்போதும் நடைமுறையில் இருக்கிறது,” என அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

Exit mobile version