தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மொழி பெயர்ப்பாளர் ஜோர்ஜ் மாஸ்டர் காலமானார்

ஜோர்ஜ் மாஸ்டர் காலமானார்

ஜோர்ஜ் மாஸ்டர் காலமானார்: தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் துறையினரின் பிரதான மொழி பெயர்ப்பாளராக விளங்கி வந்த ஜோர்ஜ் மாஸ்டர் அல்லது தம்பி அப்பா என்றழைக்கப்பட்ட வேலுப்பிள்ளை குமார் பஞ்சரட்ணம்  காலமாகியுள்ளார்.

இந்நிலையில், இலக்கு செய்தி நிறுவனம் அன்னாருக்கு தனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றது.

இந்நிலையில், ஜோர்ஜ் மாஸ்டர் மறைவுக்கு நோர்வேயின் முன்னாள் சமாதானத் துதுவர் எரிக் சொல்ஹெய்ம் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஜோர்ஜ் மாஸ்டர் குறித்த சிறு குறிப்பு

1994 ஆம் ஆண்டு காலப் பகுதி தொடக்கம் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் துறையினருடன் இணைந்து மொழிபெயர்ப்புத் துறையில் செயற்பட்டு வந்திருந்தார்.

இலங்கை அரசாங்கம் மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு இடையில் சர்வதேச நாடுகள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுக்களின் போதும் அவர் பிரதான மொழி பெயர்ப்பாளராகவும்   இருந்துவந்தார்.

2009ம் ஆண்டு இராணுவத்தினரிடம் சரணடைந்திருந்த நிலையில், 2016 ஆம் ஆண்டு 07 ஆம் மாதம் 04 ஆம் திகதி அவருக்கு எதிரான அனைத்து வழக்குகளிலிருந்தும் கொழும்பு பிரதான நீதிமன்றம் அவரை விடுதலை செய்திருந்தது.

ilakku-Weekly-Epaper-146-September-05-2021