இலங்கை- 24ஆம் நாளை எட்டிய காலி முகத்திடல் போராட்டம்

தொடர்ரும் காலி முகத்திடல் போராட்டம்

24ஆவது நாளாகத் தொடர்ரும் காலி முகத்திடல் போராட்டம்: காலி முகத்திடலில் அரசுக்கு  எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் இன்று 24ஆவது நாளாகத் தொடர்கிறது.

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக காலி முகத்திடலில் முன்னெடுக்கப்படும் போராட்டங்களுக்கு பொதுமக்கள் தொடர்ந்தும் ஆதரவளித்து வருகின்றனர்.

காலி முகத்திடலில் இருந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தொழிற்சங்க தலைவரான ரவி குமுதேஷ்,நாடு X மற்றும் Y தலைமுறைகளுக்கு சொந்தமானது என்று குறிப்பிட்டார்.

அரசாங்கம் ஏற்கனவே நாட்டை பேரழிவு பாதைக்கு கொண்டு சென்றுள்ளது.

காலி முகத்திடலில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வரும் மூன்று வாரங்களில் ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ன செய்தார்கள் எனவும் அவர் மக்களிடம் கேள்வி எழுப்பினார்.

அத்தகைய கட்சிகள் தங்கள் சொந்த சட்டை பைகளை நிரப்புவதில் மாத்திரமே ஆர்வம் காட்டுகின்றன.

ஆட்சி அமைப்பில் தங்களின் இடத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக அனைத்துத் தலைவர்களும் மக்கள் போராட்டத்தை விற்பனை செய்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Tamil News