Tamil News
Home செய்திகள் ஜி7 நாடுகள் ராஜபக்க்கள் மீது பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் – கனடா வெளியுறவு அமைச்சர்

ஜி7 நாடுகள் ராஜபக்க்கள் மீது பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் – கனடா வெளியுறவு அமைச்சர்

முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இரண்டு இராணுவ அதிகாரிகள் மீது தாம் விதித்ததை போன்று ஜி7 நாடுகளும் பொருளாதார தடைகளை விதிக்க ஆதரவு தரும் வகையில் கனடா செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் மெலனி ஜொலி, இந்த தடையை ஜி7 நாடுகளும் பின்பற்றவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “கனடா எப்போதும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காகச் செயல்படுகிறது என்ற அடிப்படையிலேயே, ராஜபக்ஷ சகோதரர்கள் மற்றும் மற்றவர்கள் மீது கடுமையான தடைகளை விதிக்க முடிவு செய்தது

இதனையடுத்து இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள ஜி7 நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், ஐக்கிய ராச்சியம், மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளை வலியுறுத்துவதே தமது நோக்கம்.’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version